இடுகைகள்

மெய்ச்சுடருக்கு அங்கீகாரம்

படம்
  மெய்ச்சுடர் செயல்பாடுகளைப்  பாராட்டி திருக்கருகாவூர் அக்னிச் சிறகுகள் அறக்கட்டளை "அக்னிச் சிறகுகள்" என்ற விருதினை வழங்கி சிறப்பித்து இருக்கிறது.  அக்னிச் சிறகுகள் அறக்கட்டளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படும்  ஆசிரியர்கள்,   உழவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்,   இதழாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான அக்னிச் சிறகுகள் விருதினை நமது மெய்ச்சுடர் இதழுக்கு வழங்கி சிறப்பித்து இருக்கிறது.  மாண்பமை மாவட்ட நீதிபதி பரமசிவம் நாகராஜன்  மற்றும் பஞ்சலோக சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ தேவ ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்.   அக்னிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் கோ சிவசண்முகம்  நமது மெய்ச்சுடரின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.   20 ஆண்டுகளுக்கு மேலாக சமூகம் சார்ந்து அனைவருக்கும்மான கல்வி, மது ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மக்கள் விரோத அரசின்  திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள்,  மக்களின் வாழ்வுரிமை சார்ந்த போராட்டங்...

ஆத்தாளூர் கல்வி வள்ளல் மு.அ.முத்துச்சாமி

படம்
ஆத்தாளூர், பேராவூரணி பேரூராட்சியின் ஒரு பகுதி.  புகழ் பெற்ற அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில், புகழ்பெற்ற மரியம்பீவி அம்மா தர்கா அமையப்பெற்ற ஊர்.   ஊரை சுற்றிலும் நீர் வழித்தடங்கள் அமையப்பெற்று அழகிய தீவு போன்று இந்த ஊர் காட்சியளிக்கிறது.  இயற்கை எழில் சூழ்ந்த ஊரகப் பகுதி.  பேரூராட்சியின் அங்கமாக இருந்தாலும் நகர வாசனை அற்ற ஊரகப் பகுதியாக இன்றும் காட்சி தருகிறது.   கல்வியாளர்களும், இலக்கியவாதிகளும், வேளாண் குடி மக்களும், உழைப்பாளிகளும் அமைதியாக வாழ்ந்து வரும் கிராமம்.  இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்த தேசத் தலைவர்கள் பாடுபட்டு வந்தனர்.  தமிழ்நாட்டில் கல்வியை கடையனுக்கும் சேர்த்து விட வேண்டும் என்பதில் பெருந்தலைவர் காமராசரும் அதற்குப் பின் வந்த தலைவர்களும் செயல்பட்டனர்.  ஆத்தாளூர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மிகப் பாரம்பரியமிக்க பள்ளியாகும்.  இந்திய விடுதலைக்குப் பிறகு நம் பகுதியில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி.  1948 ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.   தொடக்கத்தில் கோவில் வளாகத்திலே...

அரசுப் பள்ளிக்கு உதவி

படம்
  தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறை பராமரிப்புப் பணிகளுக்காக ரூபாய் 10 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.   தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் சமீபத்தில் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிரலாளர் முனைவர் அகிலன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினரிடம் பேராவூரணி பெண்கள் பள்ளியில் கழிவறைகளை மேம்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.   இந்நிகழ்வில் கலந்து கொண்ட சேரன்-லட்சுமி பிரியா இணையர் தங்களது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினர்.  தன்னார்வலர்கள் சேரன், லட்சுமி பிரியா இணையர் வழங்கிய ரூபாய் 10,000, பள்ளி கழிப்பறை மேம்பாட்டுக்காக தலைமையாசிரியர் முனைவர் மேனகா அவர்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் தமிழ்வழிக் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மகேஸ்வரி, கொடையாளர்கள் லட்சுமிபிரியா, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு

படம்
தமிழ்நாடு அறக்கட்டளையின் "கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டம்" சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.   இது தொடர்பாக தமிழ்நாடு அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க. இளங்கோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.  கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இரண்டு (தலா ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை www.tnfindia.org என்ற அறக்கட்டளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், தமிழ்நாடு அறக்கட்டளை, எண் 27, டைலர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு 15.09.2025 திங்கள் மாலை 5 மணிக்குள் கிடைக்கப்பெற வேண்டும்.

தேசிய திறனறித் தேர்வில் பொன்னாங்கண்ணிக்காடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

படம்
பேராவூரணி, தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் பொன்னாங்கண்ணிக்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.  என்.எம்.எம்.எஸ் தேர்வை 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு தமிழக தேர்வுத் துறை மூலம் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும், மாணவர்களின் பெற்றொர்களின் ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்திற்குள் இருக்க வேவேண்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.   மன திறன் சோதனை (MAT) மற்றும் கல்வித் திறன் சோதனை (SAT) என இரண்டு பாடத்திட்டங்களில் இத்தேர்வு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 6695 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் இறை...

எளிய மனிதர்களை, பெண்களை பட்டம் பெற வைத்தது திராவிட இயக்கம்! கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பேச்சு

படம்
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆறாவது பட்டமளிப்பு விழா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக விழா அரங்கில் நடைபெற்றது.  நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளில் வெற்றி பெற்று இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற தகுதியான மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.  அவர் தமது உரையில்,  "எளிய மனிதர்களும் கல்வி கற்க வாய்ப்பளிப்பது தமிழ்நாடு. அதற்குக் காரணம் நீதிக்கட்சியும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை வழி நடத்திய திராவிட இயக்கங்களும் தான்.   மருத்துவம் போன்ற பட்டப்படிப்புகளை படிப்பதற்கு சம்ஸ்கிருத மொழி தெரிந்திருப்பது அவசியம் என்ற நிலையை மாற்றியது நீதி கட்சி.   இன்று பேராவூரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் முதல் பட்டதாரிகளாக பட்டம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.   உயர் கல்விக்குப் பிறகு பட்டம் மேற்படிப்புகளை தொடர்வது அல்லது உரிய வேலை வாய்ப்புகளை பெறுவது மிகவும் அவசியம். அதற்குரிய வாய்ப்புகளை கல்லூரி உங்களுக்கு வழங்கி உள்ளது....

பள்ளிக்கு உரிய இட வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் - ஆண்டு விழாவில் மருத்துவர் பேச்சு

படம்
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வட்டாட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. 150 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளி போதிய இட வசதி இல்லாமல் உள்ளது.   இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் துரை நீலகண்டன் கூறியதாவது,  "முன்பெல்லாம் நாம் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி விளையாடுவோம். பள்ளிகள் விளையாட்டு மைதானங்களோடு செயல்படும். இப்பள்ளி மிகுந்த இட நெருக்கடியோடு செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களை விளையாட வாய்ப்பின்றி வளர்ப்பு பிராய்லர் கோழிகளை போல அடைத்து வைக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு அருகில் இட வசதி உள்ளது. அரசும் அதிகாரிகளும் மனம் வைத்தால் உரிய இட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்கெல்லாம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று எண்ணாமல் அரசு அதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு கல்லூரிக்கு அரசு புறம்போக்கு நிலத்தை வழங்கியது போல இந்த பள்ளிக்கு ஆலயத்துக்குச் சொந்தமான நிலத்தை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.  ஆண்டு விழா, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு பெரும் கொண்டாட்டமாய் நடைபெற்றது. ...