இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'முடங்கிப் போடும் மூட்டு வலி' காரணங்களும் தீர்வுகளும் - நூல் அறிமுகம்.

படம்
வயது மூப்பு என்பது வரமாக இருந்த காலம் மலையேறி வருகிறது. நாகரீக உலகில் வாழ்தல் என்பதே சுமையாக மாறியுள்ளது. 30 வயது கடந்து விட்டால் மூட்டுக்கு முட்டு வலி வாழ்வை ரணமாக்கி விடுகிறது.   சூழலும் நமது உணவுப் பழக்கமும் வயோதிகத்தை இளமையிலேயே வரவழைத்து விடுகிறது. முன்னோர்கள் போற்றி வழங்கிய உடல் நலம் சார்ந்த முறைகளை முற்றிலும் மறந்துவிட்டு அவசர வாழ்வியலில் சிக்கி அவதிப்பட்டு வாழ்கிறோம்.  தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்குமான சிக்கலாக மூட்டு வலி மாறி இருக்கிறது. தலை முதல் பாதம் வரை உடலை இணைத்தும் இயங்கியும் வரும் மூட்டுகள் முடிவில்லா வலியை நமக்கு தரும் பொழுது வழி தேடி அலைகிறோம்.  பதினோரு தலைப்புகளில் நமது பண்பாடு தொடங்கி மூட்டு வலியால் முடங்கிப் போகாமல் நீண்ட நாள் வாழ்ந்திட வாழ்த்து கூறுகிறது இந்த புத்தகம்.  எலும்பு முட நீக்கியல் சிறப்பு மருத்துவர் துரை நீலகண்டன் அவர்களின் படைப்புதான் இந்த நூல். இரண்டாவது பதிப்பை இன்னும் மெருகேற்றி தந்திருக்கிறார்.   பக்கத்துக்கு பக்கம் படங்களோடு பாடம் நடத்துகிறார்.   உட்காருவது, நடப்பது, சுமை தூக்குவது, வாகனங்களை ஓட்டுவது என வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வையும் க

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

படம்
தேசத்தின் விடியலுக்கான தலையெழுத்தை எழுதிக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்வு இருண்டு கிடக்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரிகளில் பெயரளவில் கௌரவப் பணி.   இவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு என்பது கானல் நீராகவே கரைகிறது.  தொகுப்பூதியம்,  11 மாத கால ஒப்பந்த பணி,  பெயர்தான் கௌரவப் பணி என்றாலும் பணியிடத்தில்  நிரந்தரப் பணியாளர்களால் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது  இதுதான் இவர்களின் இன்றைய  நிலை.   தமிழ்நாடு முழுவதும் 7,300 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார்கள்.    பல கல்லூரிகளில் பெரும்பான்மையாக கற்பித்தல்  பணியோடு ஒட்டுமொத்த கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான்.  துறைத்தலைவர்களே  இல்லாமல் பல கல்லூரிகளில் இவர்களைக் கொண்டே துறைகள் இயங்கி வருகிறது.   இவர்கள்தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான  பட்டதாரிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.   ஆனாலும் இவர்களின் பணி, நிரந்தரம் செய்யப்படாமல்  தற்காலிக  பணியாகவே தொடர்கிறது. தற்காலிக பணியே இங்கு நிரந்தரமாகிவிட்டது என்பது வேதனைக்குரியதாக உள்ளது. கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்த

தமிழ் வெற்றி டாட் காம் இணையதளம் நடத்திய அழகு கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

படம்
டெலிகிராம் குழுவின் மூலமாக www.tamilvetri.com இணையதளம் மாணவர்களுக்கான அழகு கையெழுத்து போட்டியை அறிவித்தது.   மாணவர்களின் கையெழுத்து திறனை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட அழகு கையெழுத்து போட்டியில் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.   கலந்து கொண்ட மாணவர்களில், சிறந்த அழகு கையெழுத்துக்காக, 15 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் www.tamilvetri.com இணையதளத்திலிருந்து பரிசுகள் அனுப்பப்பட்டு பள்ளியில் இன்று மாணவர்களிடம் வழங்கப்பட்டது.   போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்திய பள்ளியின் ஆசிரியர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் தகுதிப்படுத்திய பெற்றோர்களுக்கும் மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள். முதல் வகுப்பு   1.த.அனுஹாஷினி இரண்டாம் வகுப்பு  1. வை. ஹரிகரன்  2. நீ. லோகிதா  3. வி. ஐனிக் பிரேமா  4. வெ.மகிழினி  மூன்றாம் வகுப்பு  1. கா .ஜுவைரியா  2. ம. பாவனா ஸ்ரீ  நான்காம் வகுப்பு  1. த.தர்ஷினி 2. . ச. மது வர்ஷா  3. நீ. ஹரிபூரணி  ஐந்தாம் வகுப்பு  1. க. பூவிகா 2.சோ. குபேரன்  3. நிரஞ்சனா  4. ர

சித்திரைத் திருவிழாவில் ஓர் உணவுத் திருவிழா

படம்
 தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து வாழும் குடும்பங்களில் சாயங்கால நேரங்களில் கிடைக்கும் கொழுக்கட்டை, பணியாரம், சுழியம், போலி, வடை, சிறுதானிய அடை போன்ற உணவு வகைகள்  தற்பொழுதெல்லாம் வீடுகளில் உண்ணக் கிடைப்பதில்லை.   சாயங்கால நேரங்களில் பிள்ளைகளுக்கு கொடுக்க பாக்கெட் களில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் நொறுக்கு தீனிகளையே வாங்கிக் கொடுக்கிறோம்.  அந்த நொறுக்கு தீனிகளில் சேர்க்கப்பட்டுள்ள சுவையூட்டும் உப்புகள் பிள்ளைகளின் உடல்நலத்தை பெரிதும் பாதிப்பதை யாரும் உணர்வதில்லை.  பாரம்பரிய பண்பாட்டு உணவு வகைகளை இளைய தலைமுறை அறியும் வகையில் பேராவூரணி திருநீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் திருவிழா காலத்தில் உணவுத் திருவிழா நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் இளம் பொறியாளர்கள். "எங்க வீட்ல, பாட்டி செஞ்சு கொடுத்த பலகாரங்களை பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கொடுக்கும்போது அந்த வீட்டுக் குழந்தைங்களுக்கு பலகாரத்தோட பெயர்களே தெரியல.  சாப்பிட்டு பார்க்காமலேயே 'எனக்கு வேணாம்' னு சொன்னாங்க.   நாங்க படிக்கிறதுக்காக வெளியூருக்கு போயிட்டு ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்து ஆசை ஆசையா  சாப்பிட

சமயப்பொறை

படம்
இது ஒரு செய்தியா?   காலம் காலமாக நடப்பது தானே?  உண்மைதான்..!  சமகாலத்தில் இதை செய்தியாகச் சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  ஒவ்வொரு நாளும் மத வெறுப்புணர்வு தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  உலக சமயங்களின் சகோதரத்துவம் பேசிய விவேகானந்தர் பிறந்த மண்ணில் மதவாதம் விதைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.  சமரச சுத்த சன்மார்க்கம் சுடர் விட்ட மண்ணில் சமயங்களுக்குள் பேதம் கற்பிக்கப்படுகிறது.  சனாதன சாயம் பூசப்படுகிறது.   ஓரினமாய் ஒற்றுமையுடன் வாழ வேண்டியவர்களிடம் மதவாதம் ஊற்றப்படுகிறது.   அதனால்தான் நமது ஒற்றுமையை உலகம் உற்றுப் பார்க்க படம் எடுத்துப் பரப்புரை செய்கிறோம்.  அடுத்த தலைமுறைக்கும் தொட்டுத் தொடரும் தமிழின ஒற்றுமையை தரணிக்கு எடுத்துச் சொல்கிறோம்.  ஊருணிகள் நிறைந்து நிற்கும் பேராவூரணி தண்ணீரில் மதவாதப் பருப்புகள் வேகாது என்பதை உலகமெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறோம்.  முடப்புளிக்காடு திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோவில் திருவிழா ஒளி வெள்ளத்தில் பளிச்சென தெரிவது இசுலாமிய நண்பர்களால் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகை மட்டுமல்ல தமிழ் மக்களின் சமூகப் ப

ஹிந்தி தெரியவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக வேலை தர மறுப்பது அறமா?

https://www.facebook.com/share/v/QYR6vk94x3HGmbvi/?mibextid=w8EBqM ஹிந்தி தெரியவில்லை என்றால் "விரைவில் கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறாமல், "உனக்கு இங்கு வேலை இல்லை" என்று சொல்லும் வட இந்திய நிறுவனங்களை கண்டிக்காமல், ஹிந்தி தெரியாததை ஒரு தேசிய குற்றம்போல் பேசிக் கொண்டிருக்கிறார் டாக்டர் தமிழிசை.   தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலேயே ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி மட்டுமே தெரிந்த இந்தியர்களை நாம் அனுமதிக்கிறோமே! இதற்கு என்ன சொல்லப் போகிறார்?   தமிழ் கற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே இங்கு வேலை என்று சொல்லி அவர்களை அனுப்பி விடலாமா?  தமிழ்நாட்டில் பல தனியார் நிறுவனங்களிலும் ஹிந்தி மட்டுமே தெரிந்த, தமிழ் தெரியாத வட இந்திய பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இங்கு வந்து தமிழை கற்றுக் கொள்கிறார்கள். தமிழ் தெரியவில்லை என்பதற்காக அவர்களை நாம் புறக்கணிப்பதில்லை. பல துறைகளிலும் வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு சாரை சாரையாய் தமிழ் தெரியாமல் வருகிறார்கள். கட்டிடப் பணி உள்ளிட்ட பல வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு தமிழின் அடிப்படையே தெரியாது. அப்படி

வளர்க்க வேண்டியது மதங்களை அல்ல! சமய நல்லிணக்கத்தை!

படம்
 பேராவூரணி பேரூராட்சி,  நகர் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பள்ளிவாசல் சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கி வருகிறது. சமயச் சார்பின்மை என்பது தமிழர்களின் மிகத் தொன்மையான சிந்தனை. வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை மெய்யியலாளர்கள் போற்றி வளர்த்த பண்பாடு.   கவிஞர் கண்ணதாசன் எழுதி, திருச்சி கலைக்காவிரி வெளியிட்ட "இயேசு காவியம்" நூலின் பின் அட்டைப் பக்கத்தில் திருநீரும் குங்குமமும் அணிந்து கண்ணதாசன் காட்சி தருவார். இன்றும் இயேசு காவியம் பதிப்பிக்கப்படும் பொழுதெல்லாம் கண்ணதாசன் உருவப்படம் அப்படியே அச்சேற்றப்படுகிறது. இதுதான் சமய சமூக நல்லிணக்கம். தமிழர்களின் ஆதி பண்பாடு.   அந்தப் பண்பாடு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. பேராவூரணி பெரிய பள்ளிவாசலில் நாளெல்லாம் உடல் வருத்தி, நோன்பு இருந்து, உலக நலம் வேண்டி நிற்கும் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் உறவுகளுக்கு பிற சமயத்தைச் சார்ந்தவர்கள் நோன்பு துறப்பு (இஃப்தார்) விருந்து வழங்கி வருவது போற்றத்தக்கது.   பேராவூரணி பகுதியைச் சேர்ந்த சமய நல்லிணக்கத்தை விரும்பும் சான்றோர்களும், வணிகர்களும், அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் சமய வ

உழைத்துப் பிழைப்பதே உயர்வு! - தோழர் சிவகாமி அம்மாளின் அற வாழ்வு.

படம்
பேராவூரணி வட்டம், செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் வீ.சிவகாமி.   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பொதுமக்களுக்கான களப்போராட்டங்களில் முன் நிற்பவர்.   மாதர் சங்கத்தின் ஒன்றியப் பொறுப்பாளராக உள்ள இவர் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.   பொதுமக்கள் நலன் சார்ந்த இவரின் விண்ணப்பங்களை இப்பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் கனிவாகவும் உடனடியாகவும் பரிசீலனை செய்வார்கள். தனது வயது மூப்பிலும் அயராது உழைத்து வருகிறார் தோழர் சிவகாமி.   30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வண்டி பயணிகளுக்கு சுவையாக தேனீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.   அகலப்பாதை பணிகளுக்காக தொடர்வண்டி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த காலத்தில் 100 நாள் பணி செய்து தன்னையும், வயது முதிர்ந்த தனது கணவரையும் காத்துக் கொண்டு கட்சிப் பணிகளையும் கடமை மாறாமல் செய்து வந்துள்ளார். மருத்துவமனை சிக்கல்கள், கிராமச் சாலை சிக்கல்கள், 100 நாள் வேலைக்கான ஊதிய சிக்கல்கள் என பொதுமக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.  தற்பொழுதும் ஒரு கையில் தேநீர் பாத்திரத்தோடும் மற்றொரு கையில் பலகாரப் பையுடனும் தனது க

தோழர் முத்துக்குமரன் அவர்களின் நினைவு நாளில் கல்விக் கட்டமைப்பு பணிகள்

படம்
ஏப்ரல் 1. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கு இனிய தோழர் முத்துக்குமரன் அவர்களின் நினைவு நாளை ஒட்டி நெடுவாசல் கிராமத்தில் தோழரின் பெயரில் அமையப்பெற்றுள்ள கலையரங்கத்தில் தோழரின் உருவப்படத்திற்கு பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழமைகளால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தோழரின் நினைவு நாளை ஒட்டி இப்பகுதி இளைஞர்களால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக பகுதியைச் சேர்ந்த பள்ளிக்கூடங்களின் தேவைகள் பட்டியலிடப்பட்டது.   அதற்குரிய நிதியை பல்வேறு தரப்பிலிருந்தும் பெற்ற தோழர்கள் இன்று தோழர் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்தனர்.   "ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே  செல்லும்வாய் எல்லாஞ் செயல்"  வள்ளுவன் வகுத்த நெறிப்படி ஒட்டுமொத்த மக்களுக்காகவே தனது வாழ்நாளை எல்லாம் அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த தோழர் முத்துக்குமரன் அவர்கள் தனது மறைவுக்குப் பிறகும் தனது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட தோழமைகளைக்கொண்டு தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார்.   நினைவு நாளை இப்பகுதி பள்ளிகளின் வளர்ச்சி நாளாக மாற்றிட பெரும் பங்காற்றிய அன்புத் தோழர் நெடுவாசல் ராம்குமார் ராமச்சந்திரன் உ