இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்னிய மொழிக் காதல்! அல்லல்படும் கல்வி! பறிபோகும் பண்பாடு!

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31068-2016-06-21-19-51-38 அன்னிய மொழிக் காதல்! அல்லல்படும் கல்வி! பறிபோகும் பண்பாடு! விவரங்கள் எழுத்தாளர்:  நா.​வெங்க​டேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 21 ஜூன் 2016 Ø  " எங்கள் பள்ளியில் மாணவர்கள் தமிழில் பேச அனுமதியில்லை !" Ø  " எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல ! கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்!" Ø  " எங்கள் பள்ளியில் ஆங்கிலம், இந்தி, அரபி, தெலுங்கு போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகிறது!" Ø  "எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப்பயிற்சி வழங்கப்படுகிறது!" Ø  " எங்கள் பள்ளி மாணவர்களுக்கு சமற்கிருத பயிற்சியும் அளிக்கப்படுகிறது!" இவைகள் தனியார் பள்ளிகள் வெளியிடும் விளப்பர அறிக்கைகள். இப்படி அறிக்கையிடும் பள்ளிகள்தான் பெற்றோர்களால் கொண்டாடப்படுகிறது.  நம்மிடம் உள்ள அன்னிய மொழி மோகமே இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் வெளிப்படுத்துகிற

பேராவூரணி, இந்திராநகர் - இயற்கையாய் ஒரு சமத்துவபுரம்

படம்
பேராவூரணி ,  இந்திராநகர் - இயற்கையாய் ஒரு சமத்துவபுரம் பேராவூரணி வட்டம் ,  மாவடுகுறிச்சி ஊராட்சியில் உள்ளது இந்திரா நகர் என்னும் ஊர். சுமார்  350  க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் முற்பட்ட வகுப்பு ,  பிற்படுத்தப்பட்ட வகுப்பு ,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ,  தாழ்த்தப்பட்ட வகுப்பு என இருபதுக்கும் மேற்பட்ட சாதிகள் ,  சுமார் ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட இந்த ஊர் சமூக மாற்றத்திற்கான முன்னுதாரணம். பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்திரா நகர் என்னும் இந்த ஊர். பொதுவாக ஊரகப்பகுதி என்றாலே இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆனால் சாதிய வன்மம் நிறைந்த ஊரகப் பகுதிகளைத்தான் செய்தி ஊடகங்கள் நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. இதே தஞ்சை மாவட்டத்தில்தான் திருநாள்கொண்டசேரி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை பொது வழியில் எடுத்துச்செல்லக்கூடாது என்று ஆதிக்க சாதிகளால் தடுத்த நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்தது. இதற்கு மாறாக இதே தஞ்சை மாவட்டத்தில் சமூக நீதியைக் கடைபிடிக்கக் கூடிய ஊராகத் திகழ்கிற

விரிவடையும் வித்யாலய வியாபாரம்

விரிவடையும் வித்யாலய வியாபாரம் விவரங்கள் எழுத்தாளர்:  நா.​வெங்க​டேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 15 ஜூன் 2016 இன்றையத் தமிழகப் பெற்றோர்களை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களுல் தலையாயைச் சிக்கல், தங்கள் பிள்ளையை எந்த பள்ளியில் சேர்த்து விடுவது? என்பதாகத்தான் இருக்க முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அக்கறை அல்லது பயம் அல்லது இரண்டும் கலந்து பெற்றோர்களை வாட்டி வதைக்கும் சிக்கலாக இது ஒவ்வொரு ஆண்டும் தலைதூக்கி வருகிறது. ஏழைகள், நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம், உயர்தட்டு வர்க்கம் என்று பிள்ளைகளையும் - பள்ளிகளையும் சமூகம் பிரித்தே வைத்திருக்கிறது. இந்தியாவின் சிறப்பு மிக்க(?) வர்ணாசிரமப் பிரிவினையோடு இந்த வர்க்கப் பிரிவினையும் சேர்ந்து கொண்டு சமூக முடக்கத்தை வளர்த்து வருகிறது. பிள்ளைகளின் கல்வி குறித்த கவலையை விட, தங்கள் பிள்ளை எந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கப் போகிறது என்பதில்தான் பெற்றோர்களின் பெருமை, கவுரவம் எல்லாம் அடங்கியிருக்கிறது. வருணாசிரமத்தில் பார்ப்பனரின் இடத்தைப் பிடிக்க எல்லா வர்ணத்தாரும் முயல்வ