இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏனோ! அம்மா என் கவிதைகளை இரசிப்பதேயில்லை ! அபிநந்தினிமோகன்

படம்
   வேலை முடிந்து வீடுதிரும்பிய கதிரவனை வழியனுப்ப மனமின்றி விழி நீர் சொரிந்தன நான்கு மணி மேகம். புழுக்கத்தை அதிகரித்தாலும் புழுதியில் பட்ட ஒரு துளி, புது வாசத்தோடு புத்துணர்வையும் தர, எழுத்துக்களை காதலிப்பவன் எவராகிலும் எழுதுகோலெடுக்காமல் இருந்திருக்கமாட்டார். எழுத்துக்களை காதலிப்பதில் மிக இளையவள் எனினும் கூட, எனக்குள்ளேயும் சில எண்ணச் சிதறல்கள். எனக்கெனவாய்த்த எண்ணச்சிதறல்களும், எழுது கோலுடனும், எதையோ எழுத முற்பட, காற்றில் மிதந்து வந்த காப்பியின் மணம் நாசி துளைத்தது. “ ஆ அம்மா வந்தாச்சா ” விளம்பரக் காட்சி ஒன்று மின்னிப்போக, ஆம் அம்மாதான்! ஆறிப்போயிடும் குடிச்சிட்டு எழுது என்ற அக்கறையான வார்த்தை “சர்க்கரையிட்ட காபியினும் சற்று அதிகமாய் இனிக்கிறதே” என கவிதையே எழுத தோன்ற, ஆவி பறக்கும் காப்பி, ஆவலை அதிகப்படுத்த, என்னை  விட வேகமாய் பறந்தன, என் கையிலிருந்த ஏடுகள். ‘அச்சச்சோ’ பறக்குதே என அம்மா அத்தனையும் எடுத்துக் கொண்டே, நான் அடுக்கி வைக்கிறேன் நீ குடி என அத்தனையும் வாசித்துப் பார்த்தாள். அழகா எழுதியிருக்கயே, என் தங்கமே! அத்தனை வரியும் அற்புதமென ஆசையாய் அவள் கொஞ்ச, குளிர்ந்துபோனது என் ஆவி மட

தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழர்களுக்காக செயல்படும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - இயக்க மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி.

படம்
தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் 7-வது மாநில மாநாடு திருச்சி தமிழ்ச் சங்க மன்ற அரங்கில் திருவள்ளுவர் ஆண்டு 2053 மீனம் 20 ஞாயிறு (03.04.2022) அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி "இந்த மாநாட்டை திருச்சியில் நடத்துவது மிகவும் பொருத்தமானது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி திருச்சி மாவட்டம் பல சிறப்புகளை கொண்டது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்கள் பெருமை கொள்ளும் ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் கோரிக்கைகளை நீங்கள் கேட்காமலேயே தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.   திராவிட முன்னேற்றக் கழகம் மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்தது. மொழிசார்ந்த உங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச் செல்வேன். கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்வேன்" என்றார். இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர் தலைமையில் ந

30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் ஏழாவது மாநாடு நாளை (03.04.2022) திருச்சிராப்பள்ளியில் நடைபெறுகிறது.

படம்
தோழர் அ.சி.சின்னப்பத்தமிழர் தலைமையில் இயங்கும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் 30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தமிழ்வழிக் கல்விக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக, தமிழர்களின் நலன் காத்திட தொடர்ந்து களம் நின்று செயலாற்றி வரும் அமைப்புதான் தமிழ்வழிக் கல்வி இயக்கம்.  தமிழ்நாட்டில் பல்வேறு பாடத் திட்ட முறைகள் பள்ளிக்கல்வியில் நடைமுறையில் இருந்தபோது அதை சமச்சீர் முறையாக மாற்றுவதற்கு தொடர்ந்து போராடியது இந்த அமைப்பு. இடைக்காலத்தில் சமச்சீர் கல்வி முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த மறுத்தபோது களம் நின்று சட்டப் போராட்டம் நடத்தி நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்டியது.  தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை என்ற நிலையை உருவாக்க பொதுத் தளத்திலும், அரசியல் களத்திலும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபடுத்திக்கொண்டு தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்து பங்காற்றி வரும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் தனது 30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்து திருச்சிராப்பள்ளியில் தனது ஏழாவது மாநாட்டினை நடத்துகிறது. பல்வேறு தலைப்புகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் பங்கேற்கும் கருத்தரங்கம், ஆய்வுரைகள் மாநாட்டில் நடைபெற உள்ளது.