இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைகள் மாணவர்களின் தயக்கத்தை உடைக்கிறது- சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

படம்
தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவர்களிடம் கலைத்திறனை வளர்க்கும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.   பள்ளி அளவில் தொடங்கி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசன் - கலையரசி விருதுகள் வழங்கப்படுகிறது.   இந்த ஆண்டுக்கான கலைத் திருவிழா  பள்ளி அளவில் நடத்தப்பட்டு பல்வேறு போட்டிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.    இன்று பேராவூரணி ஒன்றிய அளவிலான கலைப் போட்டிகளின் தொடக்க விழா பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பேராவூரணி ஒன்றியத்திற்குள் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் பல்வேறு கலைப் போட்டிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒன்றிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கலைத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், "கலைகள் மாணவர்களின் தனித் திறனை வளர்த்தெடுக்கிறது.  தொடக்கத்தில் மேடை ஏறி பேசுவதை தவிர்த்து வந்த நான் பேராவூரணி பேரூராட்சியில் பத்தாண்டுகள் தலைவராக இருந்த காலத்தில் மேடையில

பேராவூரணியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

படம்
ஆலமரத்து விழுதுகள்  அமைப்பு சார்பாக மேனாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு செங்கமங்கலம் சிவன் கோவில் வளாகத்தில் சிறுவர்களை கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. பசுமைச் சிந்தனையை பரப்பும் வகையில் இந்த முன்னெடுப்பை ஆலமரத்து விழுதுகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக வளாகத்தை தூய்மை செய்யும் பணி சிறப்பாக நடைபெற்றது.   அப்துல் கலாம் பிறந்த நாளை மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்த ஆலமரத்து விழுதுகள் அமைப்புக்கு மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.