இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருளர் வாழ்வின் வெளிச்சம் ஜெய்பீம்

படம்
 இருளர் வாழ்வின் வெளிச்சம் ஜெய்பீம் ஒரு நல்ல படைப்பின் நோக்கம் சமுதாயத்தில்  விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் சிறு தாக்கத்தையேனும் ஏற்படுத்த வேண்டும். ஜெய் பீம் - இந்தத் திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது. ஆனால் இருளர்களின் வாழ்வியல் சிக்கலோ அதையும் விட பெரியது.  தமிழ்ச் சமூகத்தில் தொல்குடி சமூகமான இருளர் வாழ்வியலை கண்முன் நிறுத்தி நீதி கேட்கிறது இந்த திரைப்படம்.  நீதியின் பார்வையில், காவல்துறையின் பார்வையில், ஓட்டு வாங்கும் தேர்தல் அரசியல்வாதிகளின் பார்வையில், மார்க்சிய அரசியல் பார்வையில் என பன்முகப் பார்வையில் இந்த நாட்டின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறது படம்.  புரையோடிய சாதிய வன்மம் எப்படி வர்க்க முரண்பாட்டை உருவாக்குகிறது என்பதை இயல்பாக உணர்த்துகிறது இந்தப் படம்.  "எந்த சாதியில்தான் திருடர்கள் இல்லை" வலிமையான வசனங்கள் வாழ்வியலோடு கலந்துள்ள  வன்மச் சிந்தனையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. உயிர் காக்க நீதிமன்றத்தில் போராடும் வழக்கறிஞரின் வாதத்தையும், பாம்பு கடித்து உயிருக்காகப் போராடும் மனிதரைக் காக்கும் இருளரின் வாழ்வ