இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரபு என்ற பெயரில் வளரும் பார்ப்னியத்​தை ​வேரருப்​போம்... நற்சிந்தனையும், நல்லெண்ணமுமே நமது சமயம்! சமத்துவமே நமது சடங்கு!

படம்
மரபு என்ற பெயரில் வளரும் பார்ப்பனியத்​தை ​வேரறுப்​போம்!! விவரங்கள் எழுத்தாளர்:  நா.வெங்கடேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2015 நற்சிந்தனையும், நல்லெண்ணமுமே நமது சமயம்!  சமத்துவமே நமது சடங்கு! இந்து மதம் என்பது ஷண் மதம். அதாவது ஆறு சமயங்களின் தொகுப்பு. (ஷண்முகம் = ஆறுமுகம்) ஆறு சமயங்களுக்கும் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளும், விதிமுறைகளும் இருக்கின்றன. குறிப்பாக நடைமுறையில் சைவம், வைணவம் என்ற இருவேறு பெரிய சமயங்கள் வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பூசனைக்கானச் சடங்கு முறைகளைக் கூறும் விதிமுறைகளை ஆகம விதி முறைகள் என்று கூறுகிறார்கள். இந்த ஆகமம் ஒரே சீரான நடைமுறையை கோவில்களுக்குள் கொண்டுவருவதற்கு உதவும் சட்டமே. எப்படி என்றால்... சாலையில் நடக்கும் போது இடது பக்கமாகச் செல்லவேண்டும் என்பது சாலை விதிமுறை, அதுபோலவே ஆகமமும் கோவில் நடைமுறை பற்றியது. இந்த ஆகம விதிமுறைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இறை நம்பிக்கை என்பது முற்றிலும் ஆகம விதியிலிருந்த