இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியச் சூழலும்-ஒபாமா கருத்தும்

படம்
இந்தியச் சூழலும்-ஒபாமா உ​ரையும் பட உதவி: தினத்தந்தி இ​ணையம் மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும் - ஒபாமா உரை - ஊடகச் செய்தி இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கையை உலகமே கடைபிடிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியாவில் அது கேள்விக்குறியாகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் இந்த கருத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது.  தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து, கிறித்தவமோ, இசுலாமோ பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலெல்லாம் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுகிறதா என்ற நோக்கிலேயே விவாதித்து வருகிறார்கள். ( 27.01.2015 புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ப.ச.கவின் பொறுப்பாளர் இராகவனின் கருத்து) உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை நாம் சொன்னால் ஆட்சியாளர்கள் பகவத் கீதையை முன்மொழிகிறார்கள். மத்திய அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் சமற்கிருதம் கட்டாயப்படுத்தப்படுகிறது. மதச் சிறுபான்மை மக

இந்தி வேண்டும் என்று சொல்லும் தமிழர்களே...

படம்
இந்தி வேண்டும் என்று சொல்லும் தமிழர்களே... உங்களுக்கான பிரச்சனை என்ன? நாம் வடநாடு சென்றால்   வடநாட்டில் உள்ளவர்கள் நம்மை மதிப்பதில்லை என்பதுதானே?   அவர்கள் மதிக்கவில்லை என்பது   நீங்கள் இந்தி தெரியாதவர் என்பதால் அல்ல.   அவர்களுக்கு மரியாதை தெரியவில்லை என்பதால்.   ஒன்றை சிந்தித்துப் பாருங்கள்...   நம் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தும் வட நாட்டினர் எல்லாம் அங்கு பள்ளியில் தமிழைக் கற்றுக்கொண்டா தமிழகம் வருகிறார்கள்?   இங்கு வரும் வடஇந்தியர்களை தமிழ் தெரியாதவர்கள் என்பதற்காக நாம் அவர்களை அலட்சியம் செய்கிறோமா என்ன?   தமிழக எல்லைப் பகுதியில் பணிபுரியும் வடமாநில இராணுவவீரர்கள் தமிழகத்தில் மதிக்கப்படுகிறார்கள்.   ஆனால் வடமாநிலங்களில் பணிபுரியும் தமிழர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றால் காரணம் என்ன? அதற்காக நீங்கள் பள்ளியிலேயே இந்தி கற்றுக் கொண்டு போகவேண்டும் என்பதில்லை வடமாநிலத்தவற்களுக்கு மரியாதையைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.   அது எப்போது நடக்கும் நீங்கள் உங்களை தமிழர்களாக இந்தியாவில் எல்லா உரிமையும் பெற்ற தமிழர்களாக உணரும்போதும்,  

வேற்றுமையில் ஒற்றுமை - குடியரசு தின உறுதி​மொழி

படம்
வேற்றுமையில் ஒற்றுமை     இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று உலகுக்கு பறைசாற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இப்போது இல்லை. இந்தியாவில் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகளுக்குள் ஒளிரும் தனித்துவம் இந்தியா​வை ஒன்றிணைப்பதாகக் கூறுவார்கள் தேசியவாதிகள். இந்தியாவின் பெருமையை அமேரிக்காவிலும் உலகெங்கிலும் பரப்பியவர் என்ற பெருமைக்குரிய சுவாமி விவேகானந்தர் கூட இந்தியாவைப் பற்றி கூறும் போதும், இந்து மதத்தைப் பற்றி கூறும் போதும் முரண்பட்ட சமூகங்களிடையே உள்ள சகிப்புத் தன்மை மட்டுமே இந்த நாட்டின், இந்த மதத்தின் சிறப்பு எனக் கூறியிருக்கிறார்.       இந்து என்ற மதத்திற்குள்  வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட பல்வேறு சமயங்கள் இருக்கின்றது. இந்த சமயங்களுக்குள் உள்ள தத்துவங்களும் கருத்துக்களும், பல்வேறு சமயச் சான்றோர்களின் கருத்துக்களும்தான் இந்த இந்து மதத்தின் சொத்து. அதுபோல இந்தியாவுக்குள் வேவ்வேறு பண்பாட்டுக் கூறுகள், வெவ்வேறு மொழிகள் இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. இந்தியா என்கின்ற துணைக் கண்டம் உலகுக்கு எடுத்துரைக்கும் செய்தியும் இதுதான். 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கோவேந்தன் சிலை அமைத்திட கோரிக்கை

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கோவேந்தன் சிலை அமைத்திட கோரிக்கை                  எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் மாண்புமிகு எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள். அவருக்கு பேராவூரணி வட்டம், பூக்கொல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் சீரிய முயற்சியால்தான் பேராவூரணி தொகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தொகுதி வளர்ச்சி கண்டது. பட்டுக்கோட்டை வட்டத்திலிருந்து பேராவூரணியைப் பிரித்து பேராவூரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை, விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமணைக்குக் கூடுதல் கட்டிடம், நகரத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு சாலை வசதி, பேருந்து வழித்தடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு, பேராவூரணிப் தொகுதி வளர்ச்சியைக் கண்டது.               இவர் ஒரு பெரியாரியல் சிந்தனையாளர். ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபாண்மை மக்களுக்குப் பாதுகாப்பு

நம் அர​சை குடியர​​சாக்க என்ன செய்யவேண்டும்?

படம்
நம் அர​சை  குடியர​​சாக்க   என்ன செய்யவேண்டும் ? "இருக்கு ஆனா இல்லை" இது தமிழர்கள் எல்​லோருக்கும்   தெரிந்த ஒரு படத்தின் வசனம் ; "இந்தியா குடியரசு நாளைக் கொண்டாடுகிறது"  என்றதும் நமக்கு இந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது . எல்லோரும் சமம் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் இட ஒதுக்கீடு வேண்டாம் திறமை அடிப்படையில் எல்லோருக்கும் சம வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றுதான் நாங்களும் சொல்கிறோம் என்கிறார்கள் உயர் வகுப்பைச் சார்ந்த பார்ப்பனர்கள் . அப்படிச் சொல்பவர்கள் கோவிலுக்குள் அனைவரையும் அர்ச்சகர் ஆக்க முயற்சிக்க வேண்டும் , எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை மாற்றி செயல் வழித் தேர்வை அறிமுகப்படுத்த குரல் கொடுக்க வேண்டும் . விவசாயத் துறையில் பணியாற்றும் பலருக்கு விவசாயத்தைப் பற்றியே தெரியாது . காரணம் அவர்கள் எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு வேலையில் அமர்ந்தவர்கள் . இதுபோன்ற அபத்தங்கள் நிகழாதவாறு தடுக்கப்படும் வரை சமூக நீதி காக்க இட ஒதுக்கீட்டைப் பலப்படுத

இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா)

படம்
மோடி அரசின் இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டம் புதிய திட்டமொன்றும் இல்லை. இந்தியாவில் நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தனது உற்பத்தியை இந்தியாவில் செய்ததை நாம் நன்கு அறிவோம். நம்மையும், நம் நாட்டையும் ஏமாற்றிவிட்டுச் ஓடிப்போன இதுபோன்ற நிறுவனங்களின் கதை தமிழகம் அறிந்ததுதான். இந்நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைக்கும்போது அந்நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டுமானம், தடையற்ற மின்சாரம், குடிநீர் போ ன்ற அனைத்தையும் செய்துகொடுத்தே நாம் அழைக்கிறோம். நமது தேவைக்கு மின்சாரம், குடிநீர் இல்லையென்றாலும் இந்நிறுவனங்களுக்கு தடையற்று வழங்கினோம். ஆனால் நாம் எதிர்கொண்டது என்ன? இங்குள்ள தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்ததுதான் மிச்சம். வெளிநாட்டு முதலீட்டை ஈர்கிறேன் என்று சொல்லி அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து நாம் நமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.  உள்கட்டமைப்பை வலுப்படுத்துவோம், மானியங்களைக் குறைப்போம் என்று நமது நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிடுகிறார். வளர்ச்சித் திட்டம்

சந்தேகமா இருக்கு தருண் விஜய் அவர்களே !

படம்
சந்தேகமா இருக்கு தருண் விஜய் அவர்களே ! ·          மகாத்மா காந்தி தமிழ் மொழியைக் கற்று தமிழின் சிகரமாக உள்ள திருக்குறளைப் படித்து, அதன் கொல்லாமைக் கொள்கையைக் கடைபித்து வாழ்ந்தார். தென்அமேரிக்க மக்களுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்தார். ·   வெளிநாட்டவரான ஜீ.யூ.போப் திருக்குறளைக் கற்றுத் தேர்ந்து, அதனால் தன்னை தமிழ் மாணவன் என்றே பெருமையாகக் கூறி கொண்டார் ·   திருக்குறளைப் படித்தபின் தன்னை தமிழனாக்கிக் கொள்ள தன்னுடைய பெயரையே மாற்றிக் கொண்டார் வீரமாமுனிவர். ·    வரலாற்றை ஆய்ந்து அறிந்து தமிழர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று முழங்கினார் மராத்தியரான அறிவர் அம்பேத்கர். ·    இந்தியா முழுமையும் தமிழர்களின் சொந்த நிலம் எனக் கூறினார் வங்கத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த தோழர் ஜோதிபாசு. இவர்களின் தமிழப் பற்றில் தமிழர்களுக்குச் சந்தேகம் எழுந்ததில்லை. இவர்கள் தமிழைப் போற்றியது தமிழக மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்தல்ல என்பது வெளிப்படையாகவேத் தேரிகிறது. மாறாக தமிழின் தத்துவங்களைக் கற்றுத் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். ஆனால்,  திருக்குறள் கருத்துக்களையோ, திருக

கயல் விழி - சிறுக​தை

கயல் விழி - சிறுக​தை ஒன்பதாம் நம்பர் பேருந்து பெரியார் சிலை அருகில் வளைவதைப் பார்த்து அனைவரும் பேருந்தில் தொத்திக்கொள்ள ஆயத்தமானார்கள்…  கயல்விழி மட்டும் பித்துப் பிடித்தவள் போல் உரைந்திருந்தாள்... பாம் பாம் பாம்ம்ம்... என்ற சத்தம் கேட்டதும் உணர்வடைந்தவளாய்… வேண்டா வெறுப்பாய் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருந்தது. கய​லோ வேலையில் சக்கையைாய் பிழியப்பட்டு இருந்தாள். 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண். வறுமையின் அழுத்தத்தால் மேற்கொண்டு படிக்க முடியாதபடி அருகில் உள்ள துணிக்கடையில் சொர்ப்ப சம்மளத்திற்கு (மாதம் ரூ.1500) வேலைக்குச் சென்று வந்தாள் கயல். இரவு உணவும் சாப்பிடவில்லை, தூக்கமும் இல்லை, காலை உணவும் சாப்பிடவில்லை. கயலின் அழகிய விழிகள் சோர்வால் உள்ளேத் தள்ளப்பட்டு இருந்தன. பாவம் ரொம்பவே வாடிப்போயிருந்தாள் அந்த 20 வயது பெண். எப்​போதும் இவள் இப்படி இருந்ததில்​லை. பேருந்து இருக்கையில் ​இருக்கமாய் அமர்ந்திருந்தாள்.. இ​மைகள் இ​மைக்க மறந்திருந்தது… முதல் நாள் இரவு நடந்த சம்பவ​ம் கயல்விழியின் மனதில் படமானது... தீபாவளிக்காக இவளு