இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளியில் புதிய கட்டுமானம் மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது!

படம்
பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி,  கை கழுவும் குழாய்,  டைல்ஸ் ஒட்டப்பட்ட மேடை மற்றும் வடிகால் ஆகியவை மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.   பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நா. வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலையில்  மாணவர்கள் புதிய குழாயை பயன்படுத்த தொடங்கினர். இதை அமைப்பதற்கு பேருதவி செய்த  ராயல் டிரேடர்ஸ் உரிமையாளர் பீ. அஜ்மீர் அலி,  பொறியாளர் திருப்பதி,  பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஸ், பெற்றோர் ஆசிரியர் கழக, பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் அனைவருக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் நன்றி கூறினார். அரசு பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொண்ட அனைவரையும் மெய்ச்சுடர் சார்பில் உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறோம். ஆசிரியர், மெய்ச்சுடர். 27.04.2023.

மக்கள் நலனே முக்கியம்! பேராவூரணி வழித்தடம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று செல்ல வேண்டும்- அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்.

படம்
நகர வர்த்தகர் கழகம் சார்பில் நடைபெற்ற ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில், "பேராவூரணி வழித்தடம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று செல்ல வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது. "மே மாதத்திற்குள் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்கள் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்" என்று ரயில்வே துறை, வருவாய்த்துறை, வர்த்தகக் கழகம் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. பேராவூரணி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வலிமையான போராட்டங்களை கையில் எடுப்போம் என்று பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் அறிவித்துள்ளது. கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். வர்த்தகர் கழக தலைவர் ஆர் பி ராஜேந்திரன் தலைமையில்  வர்த்தகக் கழக செயலாளர் திருப்பதி, பொருளாளர் சாதிக் அலி ஆகியோர் முன் நின்று போராட்டத்தை நடத்தினர்.   சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வயி.திருஞானசம்பந்தம், மா.கோவிந்தராசு ஆகியோர் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பார

"மாற்றி யோசி" மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைக் கருத்தரங்கம்

படம்
பேராவூரணி, "பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை" சார்பில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டு நிகழ்வு நடைபெற்றது. தலைசிறந்த கல்வி ஆளுமைகளை கொண்டு மாணவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.   மொழியியல், மருத்துவம், பொறியியல், சட்டம், மேலாண்மையியல், வணிகம், கலையியல், அறிவியல், கடல்சார் மற்றும் கால்நடை தொடர்பான படிப்புகள் குறித்தும் பல்வேறு படிப்புகளின் அவசியம் குறித்தும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை செய்யப்படும் படிப்புகள், நுழைவுத் தேர்வு இல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை செய்யப்படும் பாடப்பிரிவுகள், பல்வேறு படிப்புகளை வழங்கும் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தொலைநிலைக் கல்வி என உயர் கல்வி பெறுவதற்கான முழுமையான விளக்கமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.    தன்னம்பிக்கை ததும்பும் உரையாகவும், வழிகாட்டும் துணையாகவும் பேராசிரியர்களின் கருத்துரை அமைந்திருந்தது.  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் 'ஆசிரியர் மனசு' திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர