இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு அரசு நடத்திய ஊரக திறனறித் தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி தஞ்சாவூர் மாவட்ட அளவில் முதலிடம்

படம்
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனறித் தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ப.ரமாதேவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆண்டுதோறும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தஞ்சை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ள ரமாதேவி, தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் த. பழனிவேல் - ஜெயந்தி இணையரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவி ரமாதேவி பள்ளி சார்பில் பாராட்டப் பெற்றார். சாதனை மாணவிக்கு மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .

அயராத முயற்சியால் அரசுப் பணி வாய்ப்புகளை வசமாக்குவோம் - நல்லுள்ளம் கொண்டவர்களால் நாள்தோறும் வளர்ந்து வருகிறது பேராவூரணி போட்டித்தேர்வு பயிற்சி கூடம்

படம்
திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடம் மற்றும் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வணிகர்கள், மாணவர்கள் பெரும் வரவேற்புடன் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. மார்ச் 5 ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த பயிற்சிக் கூடம் தொடக்கத்தில் பெரியார் அம்பேத்கர் நூலக சிறிய அறையில் நடத்தப்பட்டு வந்தது. சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அவர்களின் முயற்சியால் தற்போது நகர வர்த்தகர் கழகத்துடன் இணைந்து வர்த்தக கழக கட்டிடத்தில் விசாலமான அறையில் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயிற்சிக் கூடத்தின் தேவைகள் ஒவ்வொன்றும் நல்லுள்ளம் கொண்டவர்களால் நிறைவு செய்யப்பட்டு வருகிறது... தனது அயராத அரசுப் பணிகளுக்கு இடையே பயிற்சி கூட மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்து வருகிறார் வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார் அவர்கள். பயிற்சி வழங்க முழு பொறுப்பேற்று பம்பரமாய் சுழன்று பணி செய்கிறார் பட்டுக்கோட்டை வட்ட சார் ஆய்வாளர் ரெ.சந்தோஷ் அவர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் க.செந்தில் குமார், பூ.சிவமணி, ஆ.கார்த்தீசன், அ.அன்பரசி, பட்டுக்கோட்டை நகர் சார் ஆய்வாளர் திவ்ய

ஆத்தாளூர் பாதைக்கு ஆபத்து?

படம்
பேராவூரணி பேரூராட்சியோடு இணைந்திருந்தாலும் கிராமிய மணம் கமழும் அழகிய ஊர் ஆத்தாளூர். ஏரிகள் சூழ்ந்து பசுமை படர்ந்துள்ள அழகிய தீவு போன்றது இந்த ஊர். பேராவூரணியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தான் கல்விக் கோயில். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளையும், கல்வியாளர்களையும், வணிகர்களையும், அரசியல் ஆளுமைகளையும் உருவாக்கி வருகிறது. எழுபதுகளில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு பெண்களும் இந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தார்கள். பேராவூரணியில் அடையாளமான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், தஞ்சை மாவட்டத்திலேயே சிறப்புமிக்க கலைவாணர் விளையாட்டு திடலும் இந்த ஊரின் சொத்துக்கள். அருள்மிகு வீரமாகாளி அம்மன் வீற்றிருப்பதால் இந்த ஊர் ஆத்தாளூர் என்று பெயர் பெற்றதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலேயே மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலின் மது எடுப்புத் திருவிழா ஆத்தாளூர்

திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடம் மற்றும் பேராவூரணி நகர வர்த்தக கழகம் இணைந்து போட்டி தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

படம்
பேராவூரணியில் வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார் அவர்களால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்ட திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடம் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. உரிய இட வசதியின்றி பெரியார் அம்பேத்கர் நூலகத்தின் சிறிய அறையில் வகுப்புகள் நடந்து வந்த நிலையில், எவ்வித இடையூறும் இன்றி மாணவர்கள் தொடர்ந்து படித்திட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் உரிய இட வசதி செய்து தருவதாக உறுதியளித்தார். சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் தற்போது பயிற்சி வகுப்புகளை பேராவூரணி நகர வர்த்தக கழகத்துடன் இணைந்து நகர வர்த்தகர் கழகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் பயிற்சி வகுப்புகளை தொடர்வது என முடிவு செய்து பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். பேராவூரணி நகர வர்த்தக கழக கட்டுப்பாட்டு குழு பொறுப்பாளர்கள் எஸ்.கந்தப்பன், க.அன்பழகன், எஸ்டி.டி.சிதம்பரம், தமிழ்கடல் அப்துல்மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடத்தின் பொறுப்பாளர்கள் ஆறு.

பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் பயிற்சி

படம்
  உலக வெப்பமயமாதல் காரணமாக பருவநிலை மாற்றம் குறித்து பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. அதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலகப் பந்தை விதைப்பந்தால் நிரப்பி பசுமை சூழலை பாதுகாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பேராவூரணியில் தஞ்சை விதைப்பந்து என்ற பெயரில் காட்டு மரங்களை நாடெங்கும் வளர்த்திட பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் தோழர் மருத உதயகுமார். திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விழாக்களில் விதைப்பந்து வழங்கும் முறையை பரப்பி வருகிறார். இன்பத்தமிழ் ஊரக வளர்ச்சி நடுவத்தோடு இணைந்து மழைக்காலங்களில் ஊரகப் பகுதி எங்கும் விதைப்பந்து தூவிடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது மாணவர்களிடம் விதைப்பந்து தயாரிக்கும் முறையை பள்ளி எங்கும் சென்று பயிற்றுவித்து விதைக்கும் பணியை பரப்பி வருகிறார். விதைப்பந்து தயாரிப்பதற்கான மண்ணை பக்குவப்படுத்துவது, இயற்கை உரம் தயாரிப்பது, விதை சேகரிப்பது, மண்ணையும் விதையையும் இணைத்து விதைப்பந்து தயாரிப்பது குறித்த பயிற்சிகளை மாணவர்களிடம் விளக்கி வருகிறார். இந்த பயிற்சி செயல் வழியாக வழங்கப்படும் போது, மாணவர்கள் பெரிதும் மகிழ்கிறா

முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியருக்கு பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் பாராட்டு!

படம்
காசி ஆனந்தன் படைப்புகளில் ஓங்கி நிற்கும் உணர்ச்சிகள் என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் பா.சண்முகப்பிரியா அவர்களுக்கு பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ் இனத்திற்காகவும் தமிழ் மொழிக்காகவும் தனது நெருப்பு கவிதைகளால் தமிழினத்தை உணர்ச்சி பெறச் செய்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். அவரின் படைப்புகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும், ஈழத்தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தால் பட்ட துயரங்களையும் கவிஞரின் வரிகள் துணைகொண்டு ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார் பேராசிரியர் சண்முகப்பிரியா. நிகழ்வில் தனது ஆய்வு நூலின் படியை பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்திற்கு வழங்கி, தனது ஆய்வு குறித்து உரை நிகழ்த்தினார் சண்முகப்பிரியா. தனது கல்வி வளர்ச்சியில் தந்தையின் பங்கு குறித்தும் தனது கணவரின் பங்கு குறித்தும் உணர்ச்சி பொங்க பேசிய ஆய்வாளர், தனது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனது ஆய்வுக்கு பெருந்துணையாக நின்றதாக குறிப்பிட்டார். தனது தந்தையின் நினைவு நாளில் முனை

பெரும் நம்பிக்கையோடும் மிகுந்த பொறுப்புணர்வோடும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் பேராவூரணியில் தொடங்கப்பட்டுள்ளது

படம்
ஒன்றிய - மாநில அரசுகள் நடத்தும் அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பேராவூரணியில் திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடம் என்ற பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மையத்தின் தொடக்க விழா பேராவூரணி எம்.எஸ். விழா அரங்கத்தில் பெரியார் அம்பேத்கர் நூலக பொறுப்பாளர் தோழர் ஆறு.நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் த. சுகுமார் ஒளியேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களை வாழ்த்தி பேசினார். அவர் தமது உரையில்.... அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அரசுப் பணிகளை பெற்றிட தொடர் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பேராவூரணியில் தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அரசின் வெவ்வேறு துறைகளில் ஏராளமான அரசு அதிகாரிகளை உருவாக்கும் முயற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பயிற்சி மையத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உரிய இடவசதி வேண