இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நமது சமயம் திருக்குறள் சமயம், நமது வாழ்வியல் நூல் திருக்குறள்" என்று சொன்னவர் பெரியார் - சின்னப்பத்தமிழர் உரை

படம்
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியார் ஐம்பதாவது நினைவு நாள் கருத்தரங்கம் பேராவூரணி பேரூராட்சி விழா அரங்கில் நடைபெற்றது.   மாவட்ட அமைப்பாளர் சித திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் வழிக் கல்வி இயக்க தலைவர் அ.சி‌.சின்னப்பத்தமிழர் திருக்குறளும் பெரியாரும் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.   அவர் தனது உரையில் "திருக்குறளை ஊர் தோறும் பரப்புரை செய்தவர் பெரியார், தங்களின் சமயம் திருக்குறள், தங்களின் வாழ்வியல் நூல் திருக்குறள் என்று தமிழர்கள் கூற வேண்டும் என்று அறிவுறுத்தியவர் பெரியார். மூடநம்பிக்கைகளுக்கும் சனாதனத்திற்கும் எதிராக களமாடிய அவர் திருக்குறளை தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்றும் சனாதனத்திற்கு எதிராக சமூக நீதியை நிலைநாட்ட தமிழர்கள் திருக்குறளை தங்களின் வாழ்வியலாக கொள்ள வேண்டும்" என்றார்.  நிகழ்வின் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், சாக்கோட்டை இளங்கோவன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்போடு தமிழ் நாள்காட்டியையும் வழங்க வேண்டும் - முப்பெரும் விழாவில் பேச்சு.

படம்
பேராவூரணி தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.   தமிழ் நாள்காட்டி 25 வது ஆண்டு வெளியீட்டின் அறிமுக விழா, தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா, திருக்குறள் சாதனை சிறுவனுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர் அ. செ. சிவக்குமார் தலைமை வகித்தார்.   தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வில் வென்ற மாணவிகள் ரமாதேவி, பிரியதர்ஷினி, சரஸ்வதி,  தமிழ்ச்செல்வி மற்றும் திருக்குறள் சாதனைச் சிறுவன் சாதவ் ஆகியோர் நிகழ்வில் பாராட்டப் பெற்றனர். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ. சி. சின்னப்பத்தமிழர் தமிழ் நாள்காட்டியை அறிமுகம் செய்து உரையாற்றினார்.  திராவிட விடுதலைக் கழக பொறுப்பாளர் பால் பிரபாகரன்,  திருக்குறள் பேரவை பொறுப்பாளர் எச்.சம்சுதீன், கல்வியாளர் கே. வி. கிருஷ்ணன், திராவிடர் கழக பொறுப்பாளர் அரு. நல்லதம்பி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன்,  காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் இப்ராம்சா

பேரிடர் மீட்புப் பணிக்கு பேராவூரணி வருவாய் துறையினர் நிவாரணம் சேகரிப்பு

படம்
  தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நீரிடி மழை காரணமாக ஏற்பட்டுள்ள பேரிடரில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பேராவூரணி வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கஜா புயலால் பேராவூரணி மக்கள் பெரும் துயரை சந்தித்த காலத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சாரை சாரையாய் வந்த வாகனங்களில் நமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருட்கள் குவிந்து இருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நமது வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை வழங்கியது இன்றும் நம் கண்களை விட்டு அகலவில்லை.   இப்பொழுது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறது. பெரு வெள்ளத்தில் பெரிய கட்டிடங்கள் கூட சரிந்து விழுந்ததை நாம் சமூக ஊடகங்களில் கண்டு உள்ளம் கலங்கினோம்.    பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல முடியாமல், கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அவர்களின் கண்ணீரைத் துடைக்க முடியாமல் தவித்து நிற்கிறோம். யாரிடம் கொடுப்பது எப்படி அங்கு கொண்டு போய் சேர்ப்பது என்ற எண்ணம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து ந

பேராவூரணியில் வருவாய் கிராம ஊழியர்களின் நீதி கேட்கும் காத்திருப்புப் போராட்டம்

படம்
https://youtu.be/B4pMzbyeTQc?si=PEg3NRxtLfmqLwGm வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்கள் பணிவிருக்கும் பொழுது இறந்தால் அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது.  கருணை அடிப்படையில் வழங்கும் பணியை உடனடியாக வழங்க வேண்டும்! சிறப்பு காலம் முறை ஊதியத்தில் பணியாற்றி வரும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியத்தை வழங்க வேண்டும்! பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாத தமிழ்நாடு அரசு பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் வழங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.  இறந்து போன ஊழியர் குடும்பங்களும் ஓய்வு பெற்றவர்கள் குடும்பமும் இதனால் அவதியடையும் நிலை உள்ளது.  பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும்!  உள்ளிட்ட பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராவூரணி நகர வர்த்தகக் கழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பம்.

படம்
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் இ.கா.ப. அவர்கள் நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நிகழ்வு பேராவூரணியில் நடைபெற்றது. பேராவூரணி தனம் விழா அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக மக்களை சந்தித்து காவல்துறை சார்ந்த விண்ணப்பங்களைப் பெற்று உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிகழ்வில் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தில் கூறியிருப்பதாவது, பேராவூரணி தொகுதியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்களின் நியமிக்க வேண்டும! பேராவூரணி பகுதியில் போக்குவரத்து காவல் பிரிவை உருவாக்க வேண்டும்! போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்! நகரில் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கியமான இடங்களில் காவல் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும்! என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பமாக வழங்கினர்.

தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வில் பேராவூரணி பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை

படம்
கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் நான்கு மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.  தமிழக தேர்வுத்துறை சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் இருந்து  மொத்தம் 2 லட்சத்து 36,910 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவற்றில் 2 லட்சத்து 20,880 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.  தற்பொழுது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகள் ரமாதேவி, சரஸ்வதி, பிரியதர்ஷினி, தமிழ்ச்செல்வி ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.   வெற்றி பெற்ற மாணவர்களை மெய்ச்சுடர் வாழ்த்தி மகிழ்கிறது

குருவிக்கரம்பை அரசு பள்ளி மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

படம்
பேராவூரணி குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளுதல், தன்னை அறிதல், இடன் அறிதல், காலம் அறிதல், வலி அறிதல், வினை செயல்வகை அறிதல் உள்ளிட்ட தலைப்புகளில் மென் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.   இரண்டு நாட்கள் வழங்கப்பட்ட இந்த பயிற்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.மனோகரன் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார்.   ஆர்வமுடன் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து கொண்டதாகவும், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்டு தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள இந்த பயிற்சி பெரிதும் உதவியதாகவும் கூறினார்கள். மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இளங்கோ முத்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.  சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுபாஸ்கரன், ஆசிரியர்கள் முனைவர் க சற்குணம், நீலகண்டன், குமார், சத்தியமூர்த்தி, பூங்கோதை, கிருத்திகா, நிவேதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங

பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

படம்
  தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் மாநிலம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேரில் இருவராக தேர்வு பெற்றுள்ளனர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரமாதேவி மற்றும் பிரியதர்ஷினி. அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, 07.10.2023 அன்று நடைபெற்றது.  1,27,673 மாணவ மாணவியர்கள் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர். இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள்  (500 மாணவர்கள்  500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000/ வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000 / - வழங்கப்படும். பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவிகள் முதலமைச்சர் திரனாய்வுத் தேர்வில் பங்கேற்று இருந்தனர்.  இவர்களில்...  தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர் த. பழனிவேல் - ஜெயந்தி இணையரின மகள் ரமாதேவியும் செங்கமங்கலம் சுந்தர்ராஜ் - பார்வத