இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விருது மூலம் கிடைத்த பணத்தை பள்ளிக்கே வழங்கிய நல்லாசிரியர்

படம்
  விருது மூலம் கிடைத்த பணத்தை பள்ளிக்கே வழங்கிய நல்லாசிரியர் ------------ பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆசிரியர் காஜா முகைதீன். ஆசிரியப் பணியின் மீது காதலோடு பணியாற்றி வருபவர். ஆசிரியர் பணியையும் தாண்டி சூழலியல் சார்ந்தும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். பேரிடர் காலங்களில் தனது பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் குடும்பங்களுக்கு உதவி செய்து வருபவர். இவரின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 60 இல் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்பொழுது 120 மாணவர்களுக்கு மேல் படித்து வருகிறார்கள். ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்குள் இருந்த இந்தப் பள்ளியை கஜா புயல் நிர்மூலமாக்கியது. துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக கொட்டகையை சீரமைத்து பள்ளியை தொடங்க பெரும் முயற்சி மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெரும் ஒத்துழைப்போடு இப்பொழுது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தனியார் பள்ளியையும் மிஞ்சும் வகையில் வண்ணமயமான வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இவர் நல்லாசிரியர் விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட தொகையை ஸ்மார

வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்குங்கள்! - திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் பாவலர் அறிவுமதி பேச்சு.

படம்
  வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்குங்கள்! - திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் பாவலர் அறிவுமதி பேச்சு. பேராவூரணியில் மருத்துவர் துரை நீலகண்டன் தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளார். இந்தத் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா 19.09.2021 அன்று நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் சிலையினைத் திறந்து வைத்தார். சிலை திறப்புவிழா நிகழ்வைத் தொடர்ந்து மருத்துவர் நீலகண்டன் எழுதிய தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல் என்ற நூல் வெளியீட்டு விழா அருகில் உள்ள அரங்கில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நூலினை வெளியிட தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற பேராசிரியர் மருத்துவர் மு.குலாம்மொகிதீன் நூலினைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி விழாப் பேருரையாற்றினார். அவர் தனது உரையில்,"மருத்துவர் நீலகண்டன் அவரது மருத்துவமனையில் திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைத்ததுள்ளது வரலாற்றுச் சிறப்புக்கு உரியது. வாழ்க்கையை வள்ளுவனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்கவேண்

வான் புகழ் வள்ளுவனுக்கு பேராவூரணியில் சிலை! மருத்துவரின் மகத்தான பணி!

படம்
  வான் புகழ் வள்ளுவனுக்கு பேராவூரணியில் சிலை! மருத்துவரின் மகத்தான பணி! பேராவூரணி சேது சாலையில் அமைந்துள்ளது தர்ஷண மருத்துவமனை. எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை மருத்துவர் துரை.நீலகண்டன் அவர்களின் மருத்துவமனை. இவர் இந்த மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்களின் மீதும் தீராக் காதல் கொண்ட மருத்துவர் நீலகண்டன், திருக்குறளை மக்கள் வாழ்வியலாக கொள்ளவேண்டும். திருக்குறள் ஒன்றே மனித குலத்தை நல்வழிப்படுத்தும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் திருக்குறள் வெண்பலகை அமைத்து நாள்தோறும் ஒரு திருக்குறள் மற்றும் அதற்கான பொருளை எழுதி அனைவரையும் படிக்கும்படி செய்துவந்த மருத்துவர் நீலகண்டன் தற்பொழுது தனது மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே திருவள்ளுவருக்கு சிலை அமைத்து அனைவரையும் திருக்குறள் படிக்க வலியுறுத்துகிறார். ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு திருக்குறளையாவது தனது வாழ்வியலாக மாற்றிக் கொண்டால் அதுவே மிகப்பெரும் பலனாக அமையும் என்று கூறு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் விழா

படம்
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் விழா தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகம் சார்பில் சமூகநீதி நாள் விழா மற்றும் சமூக நீதி உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமையில் பெரியார் அம்பேத்கர் நூலகப் பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா வெங்கடேசன் முன்னிலையில் பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா அசோக்குமார் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். கல்லூரி மாணவர் மாணவிகள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்னும் நூல் நூலகம் சார்பில் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவிகளுக்கு இந்த நூலை வழங்கிப் பேசிய கல்லூரியின் முதல்வர், "இந்த புத்தகத்தில் இருந்து விரைவில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் அத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்" என்றார். உடனே சட்டமன்ற உறுப்பினர் குறுக்கிட்டு அந்தப்

போட்டித் தேர்வு பயிற்சி மையத் தொடக்க விழா

படம்
தொடக்கப் பள்ளியில் படிக்கும் பொழுது மிகவும் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தேன், சோதிடர்கள் எனக்கு படிப்பு வராது என்று சொன்னார்கள், ஆனால் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று உங்கள் முன்னால் ஒரு மருத்துவராக நிற்கிறேன் - புனல்வாசலில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையத் தொடக்க விழாவில் மருத்துவர் துரை.நீலகண்டன் பேச்சு. புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் 1991 லிருந்து 1993 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வளாகத்தில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளனர். 1993 பள்ளி இறுதி ஆண்டில் பயின்ற இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஊரகப் பகுதி மாணவர்களின் நலன் கருதி போட்டித்தேர்வு பயிற்சி மையத்தைத் தொடங்க முடிவெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக கைபேசி புலன குழு அமைத்து உடன் பயின்ற மாணவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி மையம் தொடர்பாக பேசினர். புதுக்கோட்டை தன்னார்வலர் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தோடு இணைந்து பயிற்சி வழங்குவது என முடிவெடுத்து இன்று பயிற்சி தொடங்கியுள்ளது. இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களான, தற்போது பள்ளியின

11.09.2021 மகாகவி நாள் - தமிழ்மறவன் கவிதைகள் - மெய்ச்சுடர் சிறப்பு வெளியீடு

படம்
11.09.2021 மகாகவி நாள் தமிழ்மறவன் கவிதைகள்  மெய்ச்சுடர் சிறப்பு வெளியீடு