இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நூலைப் படி!

படம்
நூலைப் படி! விகடன் பதிப்பகம் பதிப்பித்துள்ள மருத்துவர் துரை நீலகண்டன் அவர்கள் எழுதிய முடக்கிப்போடும் மூட்டுவலி - காரணங்களும் தீர்வுகளும் என்ற நூல் குறித்து இப்பதிவில் காண்போம்! விவசாய பின்னணி கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்று தாய்மொழி வழியாக கற்றுத் தேர்ந்த மருத்துவர் துரை நீலகண்டன் இந்த நூலை எழுதியுள்ளார். இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் கற்றதன் பயன் சமூகம் பயனுற விளக்கிக் கூறவேண்டும் அதுவே கற்றவரின் சிறப்பு என்கிறார் திருவள்ளுவர். வள்ளுவரின் குறளுக்கேற்ப தான் சார்ந்த துறையில் மக்களின் தேவையுணர்ந்து இந் நூலைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். நூலின் ஒவ்வொரு தலைப்புகளையும் பார்த்தவுடன் படிக்கத் தூண்டும் வகையில் அமைத்திருக்கிறார்.   தலைப்புகளை பார்த்தவுடன் தமக்கான சிக்கலை நோக்கி பக்கங்களை புரட்ட வைத்துவிடுகிறார். நுகர்வு கலாச்சாரமும் உலகமயமும் சேர்ந்து மக்களை வலியோடு வாழ வைத்திருக்கிறது.   மக்களின் வலி அறிந்து வழியமைத்து தருகிறார் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் நீலகண்டன். கழுத்து வலி கீழ் முதுகு வலி இடுப்பு வலி இடுப்பு

சமய நல்லிணக்கம் பேணும் பொன்காடு மாமுண்டி கருப்பர் கோயில்

படம்
சமய நல்லிணக்கம் பேணும் பொன்காடு மாமுண்டி கருப்பர் கோயில் பேராவூரணி அருகில் பொன்காடு கிராமத்தில் அமைந்துள்ளது மாமுண்டி கருப்பர் கோயில். இப்பகுதியில் பெரும்பாலன மக்களின் குலதெய்வமாக உள்ள இக்கோயில் சமய நல்லிணக்கத்தின் அடையாளமாக அமைந்துள்ளது. தமிழர்கள் பண்பாட்டின் அடையாளம் குலதெய்வங்கள். நிறுவனப் படுத்தப்பட்ட மதங்கள் தோன்றுவதற்கு முன்பே குலதெய்வ வழிபாடுகள் தோன்றிவிட்டன. தமிழர்களின் மிகப்பழைமையான ஆசீவகத்தின் ஐயனார் தொடங்கி குலதெய்வ வழிபாடு இருந்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்று நிறுவனப்படுத்தப்பட்ட பெருசமயங்களின் கடவுளர்கள் கூட தமிழர்களின் குலதெய்வங்கள்தான் என்கிறார்கள் அவர்கள். சமூக அறம் போற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்கள் குலதெய்வங்களாக போற்றப்படுகிறார்கள். ஒவ்வொரு குலதெய்வ வரலாறுகளும் அறவாழ்வின் அவசியத்தை சமூகத்தில் வலியுறுத்திக்கொண்டே வருகின்றன. சாதி மறுத்த காத ல் , ஈகம் செய்த நேர்மை, தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்த வீர ம் என குல தெய்வங்கள் மக்களுக்கு மனித மாண்புகளை மட்டுமே போதித்து வந்திருகின்றன. ஆனா

வாணிகம் போற்றுவோம்...

படம்
வாணிகம் போற்றுவோம்... --------------- வள்ளுவர் தோன்றாத துறையே இல்லை.  கொரோனா நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையின் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் பல நிறுவனங்கள்,  மக்களின் பசிப்பிணி போக்கும் பெரும் பணி செய்தாலும் சூழல் தெரியாமல், லாப வேட்கை கொண்டு பொருட்களை அதிக விலைக்கு விற்கும் நிலை தொடர்கிறது. விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு  பொருட்களை வாங்கி அதிக விலைக்கு விற்பது அறம் அன்று. இந்த காலகட்டத்தில் வள்ளுவர் கூறிய வணிக அறம் குறித்து பார்ப்போம்...  ---------- வணிகர்களுக்கான திருக்குறள்கள் நடுவுநிலைமை என்ற அதிகாரத்தில் அதிகமாக காணப்படுகிறது. இல்லறவியல் பகுதியில் பன்னிரண்டாவது அதிகாரமாக நடுவு நிலைமை அதிகாரம் உள்ளது. இல்லறத்தின் பண்பே, நல்லறம் கொண்டு பொருளீட்டி, நானிலம் பயனுற வாழ்வதற்கே! பொருளீட்டும் வாய்ப்பாக வாணிகம் இருப்பதால் நடுநிலைமையோடு வாணிகம் செய்வதன் அவசியத்தை இந்த அதிகாரத்தில் ஒவ்வொரு குறளிலும் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர

மருத்துவப் பணி என்பது வணிகம் அல்ல மக்களுக்கானது!

படம்
மருத்துவப் பணி என்பது வணிகம் அல்ல மக்களுக்கானது! ------------------------ சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும்; என்ற நிலையை மாற்றி மண்ணின் மக்கள் மருத்துவம் படித்திட வழிவகுத்த பனகல் அரசர் இந்தியாவின் சேகுவேரா.. அவர் கொண்டு வந்த சட்டத்தால் இன்று சம்ஸ்கிருதம் தெரியாத 90 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மருத்துவம் படித்து மண்ணின் மக்களுக்கு மாபெரும் சேவை ஆற்றி வருகிறார்கள். சமூகநீதி பேசிய நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த சமத்துவம், இன்று கொடு நோய் தாக்கத்தால் துயருறும் காலத்தில் மாபெரும் தொண்டினை செய்துவருகிறது. உலக அரங்கில் 100 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையை எட்டியிருக்கிறது கியூபா.  உலகில் எங்கெல்லாம் மக்கள் மருத்துவம் வேண்டி மன்றாடுகிறார்களோ அங்கெல்லாம் தனது மருத்துவக் குழுவை அனுப்பி மகத்தான பணியை செய்து வருகிறது கியூபா அரசு. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் மருத்துவ கட்டமைப்பு மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட வந்திருக்கிறது. மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி, வட்டத் தலைநகரங்களில் மருத்துவமனைகள், த

மக்கள் பணியில் முடச்சிக்காடு ஊராட்சி ...!

படம்
மக்கள் பணியில் முடச்சிக்காடு ஊராட்சி ...! ---------- முற்போக்கான சிந்தனை மரபுக்கும் மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்ட தலைமைப் பண்புக்கும் தலைநகராக விளங்குகிறது முடச்சிக்காடு.  எழுச்சியும் தலைமைப் பண்பும் கொண்டு குழு மனப்பான்மையோடு செயலாற்றி வருகிறார் சக்கரவர்த்தி. கஜா புயல் கண்டெடுத்த கிராமத்து தலைவன்...! புயலின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க சூறாவளியாய் புறப்பட்டவன்...! தன்னலமற்ற இளைஞனை தலைவனாக அடையாளப்படுத்தி இருக்கிறது முடச்சிக்காடு கிராமம். ஊரைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பது... ஒட்டுமொத்த மக்களுக்கும் நோயெதிர்ப்பு கசாயம் வைத்துக் கொடுப்பது... பெருநகரங்களில் இருந்து பெயர்ந்து வந்திருப்போர் வீடுகளை தனிமைப்படுத்துவது... மக்களின் அவசர கால தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து செயலாற்றுவது... மாநில அரசு வழங்கிய நிவாரண நிதியையும் நிவாரணப் பொருட்களையும் முறையாக வினியோகிப்பது... மக்களைத் தாண்டி மாடுகளையும் பாதுகாக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வைப்பது.. - என மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை சமாளிக்க சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் முடச்சிக்காடு ஊராட்ச

மக்களைப் பேணும் மகத்தான பணி

படம்
அதிகாலை 5.30 மணியிலிருந்து பகல் 11 மணி வரை கடும் உழைப்பு... ஒப்புயர்வற்ற சுகாதாரப் பணி... வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து தெருவையே அழகாக்கி தேசப் பணி செய்கிறார் சகோதரி பிரியா. பேராவூரணி நீலகண்டபுரம் மக்களின் நன்னம்பிக்கை பெற்ற பேராவூரணி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் இவர். யாரிடமும் அதிர்ந்து பேசியதில்லை. எப்பொழுதுமே குப்பை மலையாக காட்சி தரும் ஜமால் மருத்துவமனையின் முன்புறம் இப்பொழுது மிகச் சுகாதாரமாக காட்சியளிக்கிறது. இவரின் சிறப்பான செயல்பாடு இப்பகுதி மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.  யாரும் குப்பைகளைத் தெருவில் வீசுவதில்லை. வீட்டிலேயே சேகரித்து வைத்து காலையில் இவர் வந்ததும் கையிலேயே கொடுத்து விடுகிறார்கள். வாழ்த்துக்கள் சகோதரி!  உங்களின் ஒப்புயர்வற்ற பணியினால் இப்பகுதி பாதுகாக்கப்படுகிறது.  குரோனா மட்டுமல்ல எந்த ஆட்கொல்லி நோயும் இப்பகுதியை அண்டாது.