இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேராவூரணி வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் வழி கல்வி இயக்கம்

படம்
பேராவூரணியில் குடிமணையின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு குடியிருப்பு வளாகங்களை உருவாக்கி அந்த வளாகங்களுக்குத் திருவள்ளுவர், தொல்காப்பியர், பாவேந்தர், பாவாணர், அவ்வையார், பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களின் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறார் பேராவூரணி வட்டாட்சியர் த. சுகுமார். உலக மயம், தனியார் மயம், நுகர்வு கலாச்சாரம் எல்லாம் சேர்ந்து தமிழை அழித்து வரும் சூழலில் வணிகப் பலகைகள் எல்லாம் தமிழை மறந்து வரும் காலத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குத் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் பெயர்களைச் சூட்டும் ஒப்பற்ற பணியை செய்து வருகிறார் வட்டாட்சியர். இச்செயல் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழறிஞர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் பாராட்டி வருகிறார்கள்.  இந்நிலையில் தமிழ்நாடு எங்கும் மருவிப்போன தமிழ்நாட்டு ஊர் பெயர்களை மீட்டெடுப்பது, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே கல்வியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவது, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தமிழ் பிள்ளைகளின் பெயர்களை தமிழில் சூட்ட பெற்றோர்களிடம் அறிவுறுத்துவது, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்

ஆதரவாய் ஆட்சியர்

படம்
  தஞ்சாவூர் மாவட்டம் கூடுதல் ஆட்சியராக (வருவாய்) பணியாற்றி வருகிறார் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி என். ஓ. சுகபுத்திரா. ஓரிரு நாட்களில் பணி மாறுதல் பெற்று வேறு இடத்திற்கு பணியாற்ற செல்லும் இவர் பேராவூரணி திருவள்ளுவர் கல்விக் கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் மதிப்புமிக்க பாட நூல்களை வழங்கினார். இவரை சந்தித்த நிமிடத்தில் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது, அனைத்தையும் சாத்தியமாக்கும் நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் சொற்கள் இவரிடமிருந்து பட்டுத்தெறிக்கிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இவரை ஒரு முறை சந்தித்தால் சாதிக்க வேண்டும் என்கிற சிந்தனை சிறகடித்து பறப்பதை தடுக்க முடியாது. தான் ஏற்றுக்கொண்ட பதவி எளிய மனிதர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அதிகாரம் மிக்க பதவி என்பதை உணர்ந்து செயலாற்றுகிறார். "தனக்கான அதிகாரம் மக்களுக்கானது" என்று கூறும் இவர் எளிய மனிதர்களின் இருப்பிட தேவைகளை ஏராளமாய் நிறைவேற்றி இருக்கிறார். பேராவூரணி வட்டாட்சியர் மதிப்பிற்குரிய ஐயா த. சுகுமார் அவர்களின் முன்னெடுப்பில் பேராவூரணியில் செயல் படுத்தப்

பொன்னாடை வேண்டாம்! - பேராவூரணி அரிமா சங்கத்தின் புதிய முடிவு

படம்
"சிறிய மாற்றம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்" அப்படி ஒரு மாற்றம் பேராவூரணி அரிமா சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.   ஆண்டுதோறும் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெறும். அந்தப் பதவியேற்பு விழாவில் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பழகியவர்கள், நண்பர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் பொன்னாடை என்ற பெயரில் சால்வை அணிவிக்கும் பழக்கம் தொடர்ந்து வந்தது.   புதிய பொறுப்பாளர்களுக்கு அணிவிக்கப்படும் சால்வைகள் மலை போல் குவிந்து கிடக்கும். சுமார் நூறிலிருந்து ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து வாங்கப்படும் சால்வைகள் பெரிதும் பயன் தருவதில்லை. நாம் வாழும் பகுதி வெப்பம் நிறைந்த பகுதியாக இருப்பதால் எந்த நேரமும் சால்வை அணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெற்ற சாலைகளில் யாருக்கும் கொடையாக கூட கொடுக்க முடியாது. சுழற்சி முறையில் இந்த சால்வைகளை பெற்றுக் கொண்டவர்களால் அடுத்தவர்களுக்கு அணிவிக்கப்படும். புதிதாக பொறுப்பேற்றவர்களை மதிக்க வேண்டும் என்பதற்கா

கடவுளை மறைத்து நிற்கும் பூசாரிகள்

படம்
  கோவில்களில் வரிசையாக சென்று பூக்களை கொண்டு அர்ச்சிக்க எதற்கு ஒரு மனிதர் இடையில் நிற்க வேண்டும்?   அரச மர நிழலில் அமர்ந்திருக்கும் விநாயகருக்கு அருகில் உள்ள குளத்திலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்து அர்ச்சிக்க தடை ஏதும் இல்லையே?   அதுபோன்றே ஆலயங்கள் அனைத்திலும் தெய்வத்திருமேனிகளை அருகிருந்து அர்ச்சிக்க அனைவருக்கும் அனுமதி அளித்தால் என்ன?   பூசாரி என்ற இடைத்தரகர் தேவையா? பூசாரி பரம்பரை அவசியமா?   பக்தியில் ஒழுங்கை கற்பிக்க ஆகமங்கள் உதவின. அந்த ஆகமங்களை வைத்துக் கொண்டே ஒழுங்கற்ற நடைமுறைகளை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் சடங்குகளை உருவாக்கி விட்டார்கள்.  கடவுளின் பெயரால் ஒழுக்கம் வளர்வதற்கு பதில் ஏற்றத்தாழ்வுகள் ஓங்கி வளர்ந்து நிற்கிறது.   ஒரு சில வட மாநிலங்களில் மிகப்பெரிய ஆலயங்களில் கூட கருவறை வரை சென்று வழிபட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.   தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதுதான் ஆகமம் என்று சொல்கிறார்கள்.     பரம்பரை பழக்கம் என்ற பெயரில் பண்பாட்டை சீரழிக்கும் ஒழுங்கீனமான ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் நடைமுறைகளை மாற்றுவோம்.   விடுதலை ப

நம்பிக்கையை விதைக்கும் நாயகர்கள்

படம்
"காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்று பாடுகிறான் பாரதி.   ஆனால் குடியிருக்க ஒரு சென்ட் நிலம்கூட இல்லாமல் தெருக்களிலும் தோப்புகளிலும் தற்காலிக குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழும் மனிதர்களின் நிலை மிகவும் மோசமானது.   வாழ்வியலுக்காக போராடும் மனிதர்களை இனம் கண்டு அவர்களுக்குள் நம்பிக்கையை விதைத்து "நாங்கள் இருக்கிறோம்" என்று உறுதிப்பட கூறுகிறார் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர்.   பட்டுக்கோட்டை பகுதியில் வாழ்விடமின்றி தவித்து வந்தவர் மாற்றுத்திறனாளி தேவிகா. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே "வாழ்ந்து விட வேண்டும்" என்ற நம்பிக்கை துளிர் விட கோட்டாட்சியரை வந்து சந்திக்கிறார்.   எளிமை பண்பும் இரக்க குணமும் கொண்ட கோட்டாட்சியர், இவரின் நிலையைக் கண்டு கலக்கமடைகிறார். பட்டுக்கோட்டை பகுதியில் பட்டா கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா என்று வருவாய்த் துறையிடம் விசாரிக்கிறார். உரிய வாய்ப்பு அங்கு இல்லாததால் பேராவூரணி வருவாய் வட்டத்திற்குள் இடத்தை ஒதுக்கி தர பேராவூரணி வட்டாட்சியர் த. சுகுமார் உறுதியளிக்கிறார்.   கடந்த ஆண்டு ஆதனூர் வருவாய் கிராமம் கொரட்டூர்