இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்த்துக்கள் சாம்பவி

படம்
வாழ்த்துக்கள் சாம்பவி நாடாகாடு பாக்கியலட்சுமி -  திருநீலகண்டன் இவர்களின் மகள் சாம்பவி, இவருக்கு பதினொரு வயது.   நோய்தொற்று பேரிடர் காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெருநிறுவனங்கள் நிதி படைத்தோர் வாரி வழங்குங்கள் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பரப்பப்பட்டுவருகிறது. தொலைக்காட்சி வாயிலாக முதலமைச்சரின் இந்த கோரிக்கையை கண்ணுற்றார் மாணவி சாம்பவி. ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க நோய்த் தொற்றில் இருந்து விடுபட அரசின் இந்த முயற்சிக்கு உதவிட நினைத்தார். மறைந்த தனது தந்தையின் நினைவு நாளில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு அளிப்பதற்காக தான் சேர்த்து வைத்த 8300 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான  விருப்பத்தை தனது தாயிடம் கூறினார்.   மகள் சாம்பவியை உச்சி முகர்ந்து அவரது ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் தாய் பாக்கியலட்சுமி. மாவட்ட ஆட்சியரிடம் இந்தத் தொகையை வழங்கியிருக்கிறார் சாம்பவி. இவரின் இச்செயலை பாராட்டி சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட அதிகாரிகள் நேரில் சென்று பாராட்டி வருகிறார்கள்.   மாவட்ட வருவாய் அலுவலர

உணவு வங்கி

படம்
  கொரோனா நோய்தொற்று  ஊரெல்லாம் உயிர் பலி வாங்கி வருகிறது.  அதைவிட கொடுந்துயர்  உணவின்றி தவிக்கும் நிலை. பசித்தவர் ஒவ்வொருவரையும் பார்த்து உணவு பரிமாற ஏற்ற காலமாகவும் இது இல்லை. அதனால்... ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் பணியை எளிமை ஆக்கியிருக்கிறார்கள் மனோரா லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள்.. பொது இடத்தில் உணவு பொட்டலங்களை   அடுக்கி வைத்துவிட்டு, பசித்தவர் எடுத்துச் செல்லுங்கள் என்று எழுதி வைத்திருப்பது  எளியவர்களை பசியார வைத்திருக்கிறது. இதுகுறித்து இந்த சங்கத்தின் பொறுப்பாளர் நிமல் ராகவன் குறிப்பிட்டதாவது... "நாங்கள் பொது இடத்தில் உணவு பொட்டலங்களை அடிக்கி வைத்து விடுகிறோம் பசித்தவர்கள் யார் வேண்டுமானாலும்  எடுத்து பசியாறலாம். அதேபோல் உணவு வழங்க விருப்பம் உள்ளவர்களும் எங்களை தொடர்பு கொண்டால் உணவைப் பெற்று தேவைப்படும் இடங்களில் உணவு மையங்களை ஏற்படுத்தி விடுவோம்.   ஒரு உணவு வங்கியைப் போல செயல்பட்டு வறியவர்களின் வயிற்றுப் பசியை போக்குவதே எங்கள் நோக்கம்" என்றார். பேராவூரணி ரயில் நிலையம் எதிரில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த உணவு வழங்கும் முயற்சி படிப்படியாக திருச்சிற்றம்பலம் சேத

சலைக்காமல் பணியாற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்... பொதுமக்கள் பாராட்டு!

படம்
பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு நா.அசோக்குமார் அவர்களின் செயல்பாடு பொது மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது. பதவியேற்று தொகுதிக்கு வந்த நாள் முதல் பம்பரமாய் சுழன்று பணி செய்து வருகிறார். பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் வசதியுடன் 50 படுக்கைகள் அமைத்திட மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி அதற்கான பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்... உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் செய்து ஊரகப் பகுதிகளில் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.  சிறப்பாகச் செயல்படும் ஊராட்சிகளுக்கு பரிசு வழங்குவதாக கூறி சிறப்பான செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி வருகிறார். எந்தத் திட்டங்களும் எளிமையாக மக்களிடம் சென்றடைய உள்ளாட்சி செயல்பாடுகளே காரணமாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு இவர் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் இந்த காலத்தில் அவசரகால ஊர்தியின் அவசியம் மிகவும் முக்கியமானது.  இதை உணர்ந்த சட்டமன்ற உறுப்பினர்,  செருவாவிடுதி மற்றும் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு

மதிய வேளையில் முட்டையுடன் உணவளிக்கும் மனிதநேயம்

படம்
 மதிய வேளையில் முட்டையுடன் உணவளிக்கும் மனிதநேயம் வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்கிறது வள்ளுவம். பேராவூரணி பேருந்து நிலையத்தை வசிப்பிடமாக்கிகொண்டுள்ள சுமார் 20 பேருக்கு உணவளிக்கும் அரும்பணியை செய்து வருகிறார்கள் பா.பாலமுருகன் - கவிதா குடும்பத்தினர். ரெட்டவயல் மருத்துவர் பாலசுந்தரம் என்றால் இப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம்.  பூக்கொல்லை, ரெட்டவயல், மணக்காடு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பிணி தீர்த்த பெருமகன். இவரது மகன் பாலமுருகன் பேராவூரணியில் லட்சுமி மெடிக்கல் என்ற பெயரில் மருந்தகம்  நடத்தி வருகிறார், பாலமுருகனின் மனைவி ஆசிரியை கவிதா.  இவர்கள் ஒவ்வொரு நாளும் பேராவூரணி பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்து வரும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்கள். "ஒருவேளை உணவின்றி இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை உணரும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது.  சாதாரண நாட்களில் கோவில்களிலும் கடைகளிலும் பிச்சை எடுத்தேனும் பிழைத்துக் கொள்ளும் இவர்களுக்கு இப்பொழுது வாழ்வதே பெரும் சவலாக உள்ளது. ஒருவேளை உணவுக்குக்கூட நிலையற்ற நிலையிலிருக்கும் இவர்களுக்கு உணவளிக்கும் எண்ணம் தோன்றியது. எனது மனைவியிடம் கூறினே

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

படம்
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தோழர் ஆறு. நீலகண்டன் அவர்களின் முகநூல் பதிவை படித்ததிலிருந்து மிக உயரத்தில் வைத்துப் போற்றக் கூடியவர்களாக மாறிப்போனார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்கள். பெரும் தொற்றினால் இறந்த உடல்கள் கங்கை நதிக்கரையில் வீசப்படுகிறது... பெரும் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள்  மரித்துப் போனால் மனிதநேயமும் மரித்துப் போகிறது. அறம் மறந்த அச்சம் சூழ்ந்து கொள்கிறது. சகோதரத்துவம் செத்து மடிகிறது.  இறப்பினை விடக் கொடூரமானது வாழ்ந்த மனிதர்களின் உடல்களை அனாதையாக விட்டு விடுவது. இந்த நிலையில்தான் பெரும் தொற்று பாதிப்பினால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியை பொறுப்போடு செய்து வருகிறார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்கள். இறைவனின் திருப்பெயரால் என்ற வாசகத்தை தாங்கிக்கொண்டு குழு மனப்பான்மையுடன், பாதுகாப்பு உடைகள் அணிந்து, இறந்தவர்களின் இல்லத்தில் உள்ளவர்களைத் தேற்றி இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நிகழ்த்திவரும் இவர்களை என்ன பாராட்டினாலும் தகும். பிறர் துயரை தம் துயர் போல் பார்த்து தம் அறிவாற்றலை அவர் துயர் துடைக்க பயன்படுத்துவதே உண்மை அறிவு என்கிறார் வள்ளுவ