இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குருதிக்கொடை முகாம்

படம்
  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று 29 01.2024 திங்கட்கிழமை 14 ஆவது குருதிக்கொடை முகாம் நடைபெற்றது . பேராவூரணி பேரூராட்சி விழா அரங்கில் நடைபெற்ற  இந்தக் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் பெருமளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர். குருதி வகையறிந்து உரிய மருத்துவ ஆய்வுகள் செய்து பொதுமக்களிடமிருந்து குருதிக்கொடை பெறப்பட்டது.  குருதியை கொடையாக கொடுத்தவர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் இருந்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்ற திருக்குர்ஆன் வசனத்தை முன்னிறுத்தி இந்தக் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.  பகல் 2 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வுக்காக கடந்த சில நாட்களாகவே பேராவூரணி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில்  குருதிக்கொடை குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் வழங்கி வந்தனர்.  தமிழ்நாடு முழுவதும் குருதிக்கொடை வழங்குவதில் முன் நின்று செயலாற்றி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

பசுமை மனிதர் மு.சுந்தரம் ஐயா

படம்
  "சூழலியல் பொறுப்பு  ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும் சார்.  நம்ம சுத்தி இருக்கிற மரங்களுடைய எண்ணிக்கை குறைஞ்சுகிட்டே  வருகிறது.  சாலைய விரிவாக்கறேன்னு சொல்லி நூறாண்டுகளுக்கு மேல இருந்த மரங்கள எல்லாம் வெட்டிப்புட்டாங்க. பசுமையா இருந்த நம்ம நகரத்த இப்ப பார்க்கும் போது ஒரே வெயில் காடா இருக்கு.  கடைத்தெருவுல நிழலுக்கு நிக்கிறதுக்கு கூட மரம் இல்ல.   மார்கழி மாச மத்தியானத்துல கூட நம்ம ஊரு பாக்குறதுக்கு சித்திரைப் போல இருக்கு.   பாக்குற இடமெல்லாம் பச்சை படர்ந்து இருக்கணும் சார்.  அதுதான் என்னோட கனவு.   அதுக்காகத்தான் தொடர்ந்து வேலை செய்யுறேன்" பொறுப்புணர்வும் கோபமும் கொப்பளிக்க பேசுகிறார் சுந்தரம் ஐயா. பேராவூரணி கரூர் வைசியா வங்கியில்  பாதுகாவலராக வேலை செய்யும் சுந்தரம், இப்பகுதி மக்களால் பசுமை மனிதர் என்று அழைக்கப்படுகிறார். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மரம் வளர்ப்பு குறித்து பேச்சு கொடுக்கிறார்.  ஆர்வம் காட்டும் மனிதர்களிடம் மரக்கன்றுகளை வழங்கி வளர்க்கச் சொல்கிறார்.  தொடர்ந்து மரக்கன்றுகளின் வளர்ச்சி குறித்து  உறவுகளை விசாரிப்பதைப் போல  விசாரிக்கிறார்.  பூத்ததா காய்த்ததா என்

"மாரத்தான் மனிதர்கள்" நம்பிக்கை விளக்கு

படம்
  முடச்சிக்காடு வெ. நீலகண்டன் எழுத்தில் உருவான "மாரத்தான் மனிதர்கள்" நூல் வாழத் துடிக்கும் மனிதர்களுக்கான நம்பிக்கை விளக்காக சுடர் விடுகிறது. சாமானிய மனிதர்களின் சரித்திரத்தை பதிவு செய்திருக்கும் நூல் "மாரத்தான் மனிதர்கள்". சலிப்புத் தட்டாத தொடர் பயணம் ஒருவரின் வெற்றிக்கு வித்தாக அமைந்து விடுகிறது என்பதை பக்கத்துக்கு பக்கம் பதிவு செய்து வைத்திருக்கிறது இந்த நூல். "மாற்றத்திற்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்" என்ற துணை தலைப்போடு விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூல் பிடிப்பற்ற வாழ்க்கையில் இருந்து இலக்கு நிறைந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. தனது எழுத்து மூலம் ஏணிப்படியாய் நிற்பவர்களின், தியாக வாழ்வை திரையிட்டு காட்சிப்படுத்துகிறார் நீலகண்டன். ஏமாளிகளாகவும் கோமாளிகளாகவும் சமூகத்தால் கணிக்கப்படும் எளிய மனிதர்களின் பொருள் நிறைந்த அற வாழ்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழவாரப் பணியை செம்மையாய் செய்திருக்கிறார் நண்பர் நீலகண்டன்.   தன்னை மறந்து சமூகமாய் வாழ்பவர்களை மட்டுமே துறவிகள் என்கிறது தமிழ்.  துறந்தாரின் பெருமை பேசுகிறது இந்த நூல். உலக