இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நூலகம் ஓர் ஆலயம் கலைப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.

படம்
குருவிக்கிரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நூலக வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.   இந்தப் போட்டிகளில் பங்கேற்ற  மாணவர்கள் அனைவருக்கும்  அறக்கட்டளை சார்பில் சான்றிதழும் பெரியார் அம்பேத்கர் நூலகம் சார்பில் எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய அண்டத்தின் கதை அறிவியல் நூலும் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வி. மனோகரன் நிகழ்வுக்கு தலைமை ஏற்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாணவர்களிடம் உரை நிகழ்த்திய பள்ளியின்  ஆசிரியர் முனைவர் க. சற்குணம், "காலம் முழுவதும் கற்றலை தொடர வேண்டும்.  கற்றலே கற்பித்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது இது அறிவியலாளர் ஐன்ஸ்டினின் கூற்று.  சிறுவயதிலேயே நூலகத்திற்குச் சென்று படிக்கும் பழக்கத்தை பழக்கி கொள்ளுங்கள்"  என்றார். நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சுபாஸ்கரன், ஆசிரியர்கள் நீலகண்டன், கிருத்திகா, நிவேதா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"மாணவர்களுக்கான கலைப் போட்டிகள் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது" நூலக வார விழாவில் பேச்சு.

படம்
56 ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடம் நூல் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் "நூலகம் ஓர் ஆலயம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் திரு சுதாகர் தொடங்கி வைத்து  பேசியதாவது,  "உலக அளவில் புகழ்பெற்ற சாதனையாளர்கள் அனைவரும் நூலகங்களில் நூல்களை தொடர்ந்து வாசித்தவர்கள்.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அறிவர் அம்பேத்கர் அவர்கள் தமது வாழ்வின் பெரும் பகுதியை நூலகங்களில் செலவு செய்தவர்.  இது போன்ற கலைப் போட்டிகள் மாணவர்கள் வாசிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்ட வேண்டும்"  என்றார்.  நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.   பள்ளி அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடத்தப்படும் இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப் படும்.  மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மா