இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றவுணர்வு

படம்
  அப்பா, பள்ளிக்கூடத்துல யாருமே இல்லப்பா! ஏன்ம்மா... மிஸ் இருந்தாங்களே? அதில்லப்பா நம்ம சாரு, நம்ம மிஸ் யாருமே இல்லப்பா! இப்ப இருக்கிறவுங்களும் நம்ம சாரு, நம்ம மிஸ்சுதாம்மா! போங்கப்பா! இது எனது மகள் மகிழினி இரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த நாளில் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல். மகிழினி என்ன செய்வாள்? மனமெல்லாம் இறுக்கமாக இருந்தவள் நாளாக நாளாக மாறிப்போனாள். நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி - நிரந்தர ஆசிரியர்கள் யாருமின்றி, நி​லையான தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பணியாற்றிய தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டார்கள். தற்காலிக ஆசிரியர்கள், தலைமையின்றி அனுபவமின்றி புதிய புதிய கற்பித்தல் முறைகளில் பயிற்சியின்றி பணியாற்றி வருகிறார்கள். பெற்றோர்கள் ஏதேனும் ஆலோசனை வழங்கினாலும் "நெருக்கடி கொடுக்காதீர்கள்" என்கிறார்கள்.  "இப்பள்ளியில் பணியாற்ற யாருக்கும் விருப்பமில்லை, அதனால் எந்த ஆசிரியர்களும் இங்குப் பணியாற்ற வரவில்லை" என்கிறார்கள

பேராவூரணி பகுதி பள்ளிகளில் "ஏபிசி திட்டம்" சிறப்பு வகுப்பு தொடக்கம்

படம்
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான "அகடமிக் பிரிட்ஜ் கோர்ஸ்" என்ற "ஏபிசி திட்டம்" சிறப்பு வகுப்புகள் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை மற்றும் செங்கமங்கலம் அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.  அமெரிக்க வாழ் தமிழர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது தமிழ்நாடு அறக்கட்டளை.   இந்த அறக்கட்டளை மூலம் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களில் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இந்தப் பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.  இந்த வகுப்புகளுக்காக அறக்கட்டளை சார்பில் தகுதியுள்ள ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் பரிந்துரையின் பெயரில் பள்ளிகளில் நியமிக்கப் படுகிறார்கள்.  மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கலைத்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது, பெற்றோர்களை இழந்து வாடும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்வது என கல்விசார் செயல்பாடுகளை செய்து வருகிறது தமிழ்நாடு அறக்கட்டளை. தமிழ்நாட்டில் இதுவரை 28 மாவட

சமூகத்திற்கான நம்பிக்கை சமகால ஆசிரியர்கள்...

படம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து கிளம்பும் அறமாய் ஆசிரியர்கள் எதிர்கால சமூகத்திற்கான நம்பிக்கையை விதைப்பவர்களாய் இருக்கிறார்கள். பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தேன். இந்தப் பள்ளியில் தான் எனது மகளை இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறோம். பள்ளி வளாகம் எங்கும் மாணவர்கள் காந்தி, நேரு, காமராஜர், வேலு நாச்சியார், ஜான்சி ராணி, இந்திரா காந்தி என தலைவர்களாய் வலம் வந்தார்கள். விழா உயிர்ப்போடு நடைபெற்றது. விடுதலை நாள் விழாவை மையப்படுத்தி நடத்தப்பட்ட பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்ற மாணவர்கள் சிறப்பு விருந்தினர்கள் கரங்களிலிருந்து கொண்டாட்டமாய் பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். பள்ளியிலும் அதற்கு முன்பாக வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட கொடியேற்றும் நிகழ்வில் மரியாதைக்குரிய வட்டாட்சியர் த சுகுமார் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி பரிசுகளை வழங்கினார்.   பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக பொற

வளநாடு வரட்சி நாடாக மாறிய வரலாறு - புதுக்கோட்டையில் எழுத்தாளர் நக்கீரன் உரை

படம்
புதுக்கோட்டை வறட்சி மாவட்டம் அல்ல ஈகம் சூழ்ந்த பகுதி என்றார் சூழலியல் அறிஞர் எழுத்தாளர் நக்கீரன். புதுக்கோட்டையில் ஆறாவது புத்தகத் திருவிழா முற்போக்காளர்களின் பெரும் கொண்டாட்டமாய் நடைபெற்று வருகிறது.   ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆளுமைகள் வருகை தந்து சிறப்புரை நிகழ்த்தி வருகிறார்கள்.   02 ஆகஸ்ட் 2023 அன்று புதுக்கோட்டையின் சூழலில் சார்ந்து சிறப்புரையாற்றிய சூழலியலாளரும் எழுத்தாளமான ஐயா நக்கீரன் புதுக்கோட்டை சார்ந்த வரலாற்றை தரவுகளோடு வழங்கினார். " புதுக்கோட்டையின் பழைய பெயர் பன்றிவள நாடு. பன்றி என்றால் தற்பொழுது உள்ள பன்றி அல்ல வளம் நிறைந்த காடுகளில் உள்ள பன்றி.   வளம் நிறைந்த முல்லை நில காடுகள் சூழ்ந்த பகுதியாக இந்தப் பகுதி திகழ்ந்துள்ளது. புதுக்கோட்டையின் மலைகள் இன்று போல் மொட்டை மலைகளாக இல்லாமல் வளம் நிறைந்த மலைகளாக இருந்துள்ளது. தற்பொழுது டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மலை கோவில்கள் நிறைந்து காணப்படுகிறது. மலைக்குன்றுகளே இல்லாத இந்த மாவட்டங்களில் மலைக் கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து கல்லெடுக்கப்பட்டது? அருகிலுள