திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அறக்கட்டளையின் "கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டம்" சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.  


இது தொடர்பாக தமிழ்நாடு அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க. இளங்கோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. 


கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இரண்டு (தலா ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை www.tnfindia.org என்ற அறக்கட்டளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், தமிழ்நாடு அறக்கட்டளை, எண் 27, டைலர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு 15.09.2025 திங்கள் மாலை 5 மணிக்குள் கிடைக்கப்பெற வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி

பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?