தேசிய திறனறித் தேர்வில் பொன்னாங்கண்ணிக்காடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!
பேராவூரணி, தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் பொன்னாங்கண்ணிக்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். என்.எம்.எம்.எஸ் தேர்வை 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு தமிழக தேர்வுத் துறை மூலம் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும், மாணவர்களின் பெற்றொர்களின் ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்திற்குள் இருக்க வேவேண்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். மன திறன் சோதனை (MAT) மற்றும் கல்வித் திறன் சோதனை (SAT) என இரண்டு பாடத்திட்டங்களில் இத்தேர்வு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 6695 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் இறை...