சிறந்த பள்ளிக்கான விருதினைப் பெற்ற திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான ஏபிசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த பள்ளிக்கான விருதினை தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கி உள்ளது. 


சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் இதற்கான விருது வழங்கப்பட்டது.  


இந்தத் திட்டத்திற்கான அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நா வெங்கடேசன் மற்றும் திட்ட ஆசிரியர்கள் சந்திரா, சோனியா காந்தி ஆகியோர் தலைமையாசிரியர் சு.ஜெயமணி அவர்களிடம் அறக்கட்டளை வழங்கிய விருதினை கொடுத்து மகிழ்ந்தனர். 


சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாராட்டினார்.


பள்ளியில் நடைபெற்ற எளிய விழாவில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி

பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?