கயிறு



தோழர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய சிறார் நூல் வரிசை படைப்புகளுள் ஒன்று "கயிறு" சிறு நூல்.


பதின் பருவப் பிள்ளைகளுக்கு படிக்க கொடுக்க வேண்டிய மிக அருமையான நூல்.


சமகால சிக்கல்களை சிறு குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் நாடக வடிவில் அமைத்திருக்கிறார்  ஆசிரியர் சரவணன்.


எளிய நடையில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் இந்த நூல் வெளி வந்திருக்கிறது.  பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.


பழனிக்குச் சென்று வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு கொடுக்கும் சாமி கயிறு, இன்று சாதி கயிறாக மாறியுள்ளதை பளிச்சென்று விளக்கியிருக்கிறார்.


எந்தவித சமூகப் பொறுப்பும் இல்லாதவன்,  படிக்கிற,  பரீட்சைக்குப் போகிற பிள்ளைக்கு ரெண்டு ரூபாய்க்கு பேனா வாங்கி கொடுக்காதவன் எல்லாம் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை மறித்து மயக்கும்  மஞ்சள், சிகப்பு, பச்சை என  கைகளில் கட்டிக் கொள்ள விதவிதமான கயிறுகளை மட்டும் இனாமாக கொடுக்கிறானே எப்படி?  மதவாத செயல்களைச் செய்ய அந்த பொறுப்பற்றவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வியை எழுப்புகிறார் ஆசிரியர்.   


மதவெறி, சாதி வெறி பெருமித உணர்வாய்  மூளைக்குள் ஏற்றப்பட்டு பகுதி பகுதியாக பணி செய்திட சமூகப் பொறுப்பற்றவர்கள் மத வாதிகளாய் மாறிட சனாதன கும்பல் பழக்கப்படுத்துகிறது. 


சாதிப் பெருமிதத்தை ஊதிப் பெரிதாக்காமல் பக்குவமாய் பிள்ளையிடம் பேசி புரிய வைக்கும் தாயின் கதாபாத்திரம் மிகச் சிறப்பு. 




உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பரிசாய் கொடுக்க சிறந்த நூல்.  பெரியவர்களும் படித்து நம்மிடம் படிந்துள்ள சாதிப் பெருமித உணர்வை தூசி தட்டிக் கொள்ளலாம்.


பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் படிக்க கிடைக்கிறது.


ஆசிரியர்,

மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

பேராவூரணியில் மகளிர் நாள் விழா

பேராவூரணி வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் வழி கல்வி இயக்கம்