இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிக்கு இருக்கை வழங்கிய தாய் - எஸ்.எம்.சி. கூட்டத்தில் பாராட்டு

படம்
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.    இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் நிரஞ்சன் என்ற மாணவனின் தாய் தன் மகனோடு படிக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் வகுப்பறையில் அமர்ந்து படிக்க நாற்காலிகளை வழங்கினார்.  சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகளை பள்ளிக்கு இலவசமாக வழங்கிய இவர், தனது மகன் படிக்கும் வகுப்புப் பிள்ளைகள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்து படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் குட்டி நாற்காலிகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.   கொடை வழங்கிய நிரஞ்சனின் பெற்றோர் நிஷாந்தி - சிவனேசன் இணையருக்கு பள்ளி மேலாண்மை குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.   முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவி நித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர் ஷீலா ராணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹபீபா ஃபாரூக், பெற்றோர் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியரும் எஸ்.எம்.சி. ஆசிரிய உறுப்பினருமான காஜா முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தி நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.   ந

பேராவூரணியில் புதுப்பொலிவுடன் ரமா மகளிர் ஆடையகம்

படம்
நாட்டாணிக்கோட்டை சாலை முடப்புளிக்காடு பகுதியில் அன்புத் தோழர் த. பழனிவேல் அவர்கள் இல்லத்திற்கு அருகில் ரமா மகளிர் ஆடையகம் நாளை 20.10.2024 முதல் செயல்பட உள்ளது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் முன்பாக, சந்தை எதிரில் செயல்பட்டு வந்த ரமா டெக்ஸ் தற்பொழுது மீண்டும் ரமா மகளிர் ஆடையகமாக வளர உள்ளது.  போட்டிகள் நிறைந்த வணிக உலகில் நுகர்வு கலாச்சாரத்தை வாடிக்கையாளர்களிடம் திணித்து பெரும் முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. வாடிக்கையாளர் நலன் என்ற பெயரில் செய்யப்படும் ஆடம்பர செலவுகளும் வாடிக்கையாளர்கள் தலையிலேயே கட்டப்படுகிறது. எளிமையான வணிக முறைகள் மறைந்து வருகின்றன.  இல்லத்திலேயே குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு சிறு தொழிலாய் செய்யப்படும் வணிக முறைகள் மறைந்து அதன் வாய்ப்புகளையும் பெரும் வணிக நிறுவனங்கள் சுவைத்து செரிக்கின்றன.  கனிவான சொல், வாடிக்கையாளர் நலன், தரமான ஆடைகளை குறைந்த விலைக்கு தர வேண்டும் என்கிற பேரவா, ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அதனால் வாடிக்கையாளர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் விலை உயர்வை தடுத்து குறைந்த விலைக்கு மகளிர் ஆடைகளை வழங

வாழ்த்துகள் கலைஞர்களே!

படம்
பேராவூரணி பாரதி தையல் பயிலகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்வில் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழை பயிற்றுநர் நித்யா வழங்கினார். தையல் கலைஞர்கள் தங்களின் நுட்பம் நிறைந்த கலையால் மக்களை மகிழ்விக்கும் பெரும் பணியை செய்கிறார்கள்.  தங்களின் அயராத உழைப்பால் விழா காலங்களில் சிறுவர்களையும் பெரியவர்களையும் கொண்டாட வைப்பவர்கள் இந்த தையல் கலைஞர்கள்.  ஆயத்த ஆடைகளின் வரவால் தனித்துவமாக அளவெடுத்து தைத்து போடும் பண்பாடு மறைந்து வந்தாலும் மீண்டும் தையல் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் பெருகி வருகிறது.   இங்கு பயிற்சி பெற்று செல்லும் மாணவர்கள் தொடர்ந்து ஆடை வடிவமைப்பு நுட்பங்களை அறிந்து பணியாற்ற மெய்ச்சுடர் வாழ்த்துகிறது.

திருக்குறள் மற்றும் திருவாசகம் ஆய்வாளர்களுக்கு விருது

படம்
திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க. இளங்கோ அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருவாளர்கள் கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திருக்குறள் மற்றும் திருவாசகம் ஆய்வாளர்களுக்கான விருதுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் உள்ளடக்கியதாகும். விருத்தாளர்களை தேர்வு செய்வதற்கு உரிய ஆய்வாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்ப படிவத்தினை அறக்கட்டளையின் இணையதளமான www.tnfindia.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 10.10.2024 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள், தமிழ்நாடு அறக்கட்டளை, எண்: 27, டெய்லர்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்னும் முகவரிக்கு அனுப்பி வைத்தடல் வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

பசுந்தாள் உரம் நிலத்தின் வளம்- வேளாண் துணை இயக்குனர் பேச்சு

படம்
பேராவூரணி வட்டாரம் ரெங்கநாயகிபுரம் கிராமத்தில் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு செய்யப்பட்ட வயல்கள் மற்றும் ஜிங் சல்பேட் பயன்படுத்தப்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தஞ்சாவூர் மாவட்ட மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் எஸ் மாலதி.  பயனாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப் பட்டதா? என்றும் உழவர்களை கேட்டறிந்தார்.   பேராவூரணி முதன்மை விரிவாக்க மையத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறட்சியை தாங்கி வளரக்கூடிய சொர்ணாசப் நெல் விதைகளை, இடு பொருட்களுடன் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் காலகம் கிராமத்திற்கு உட்பட்ட அஞ்சுரணிக்காடு பகுதியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் உழவர் வயல் நாள் விழாவில் பங்கேற்று பசுந்தாள் உரங்களின் பயன்பாடு குறித்து தொழில்நுட்ப விளக்கம் அளித்தார்.   நிகழ்வில் டிராக்டர் கொண்டு பசுந்தாள் உரப்பயிரை மடக்கி உழவு செய்து மண்ணுக்கு வளம் சேர்க்கும் தொழில்நுட்பம் செயல் விளக்கமாக செய்து காட்டப்பட்டது. உழவர் வயல் நாள் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேராவூரணி வேளாண்ம

ஜவுளி வியாபாரியின் மகள் சாதனை

படம்
பேராவூரணி ஜவுளி வியாபாரி சிவக்குமார் இல்லத்தரசி ஜோதி இவர்களின் மகள் ஸ்ரேயா மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 627 மதிப்பெண்கள் பெற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக படிப்பதற்கு வாய்ப்பு பெற்றுள்ளார்.  சிறுவயது முதலே மருத்துவராவதை இலக்காக கொண்டு படித்து வந்த ஸ்ரேயா பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டார்.  "நாங்க பட்ட கஷ்டம் எங்க  புள்ளைங்க படக்கூடாதுன்னு  தான் ஆசைப்பட்டோம்.  எங்க புள்ளைங்க பொறுப்போடு படிச்சு இன்னைக்கு மருத்துவராக போகுதுன்னா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.  தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு கிடைச்சிருந்ததுன்னா என்னால ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாது.  அரசு கல்லூரியில இடம் கிடைச்சதால ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.  நம்ம பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சதா நினைச்சு பெருமையா இருக்கு.  நிறைய பேரு பொம்பள புள்ளைய ஏன் படிக்க வைக்கிற அப்படின்னு கேட்டாங்க.  ரெண்டு வருஷமா நீட்டுக்கு படிச்சுக்கிட்டு இருக்கா வேற ஏதாவது படிக்க வைக்கலாமில்ல அப்படின்னு நிறைய பேரு சொன்னாங்க.  நானும் கூட

குருவிக்கரம்பையில் இருந்து கன்னியாகுமரி - சாதித்த அரசு பள்ளி மாணவன்

படம்
செல்வன் சிவசுப்பிரமணியன், இவர் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்.   சிறு வயது தொடங்கி மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்து வந்த சிவசுப்பிரமணியன் 12-ம் வகுப்புக்குப் பிறகு நீட் தேர்வுக்கு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.   அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பை பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு கிடைக்கப்பெற்று தற்பொழுது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படிக்க உள்ளார்.   சிவசுப்பிரமணியன் நீட் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் 530. "எங்க ஊர்லையே நான் தான் முதல் மருத்துவர்" என்று பெருமை பொங்க கூறும் சிவசுப்பிரமணியன் அவர் குடும்பத்தில் முதன் முதலாக உயர் கல்வியை எட்டிப் பிடித்துள்ளவர்.  அப்பா கருப்பையன் ஒரு விவசாய கூலித் தொழிலாளி.  அம்மா வள்ளி இல்லத்தரசி.  அண்ணன் மகேஸ்வரன் இயந்திரவியலில் பட்டயம் படித்தவர், இந்தக் குடும்பத்திலிருந்து சிவசுப்பிரமணியன் மருத்துவராக மலரப் போகிறார்.   தங்கள் பள்ளி மாணவனின் வெற்றியை பதாகை வைத்து கொண்டாடி மகிழ்கிறத

பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

படம்
பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் தொடர்ந்து நற்பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.   எளியவர்களுக்கு உதவுவதல், அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தல் என தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள் பேராவூரணி ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள்.  இன்று 25. 08. 2024 காலை பேருந்து நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்ட மா, பலா, தேக்கு, நெல்லி, கொய்யா மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு சங்க நிர்வாகிகள் வழங்கினர்.  தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்டத் துணை ஆளுநர் கேபிஎல் ரமேஷ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கி மகிழ்ந்தனர்.  பசுமை சூழலை பரப்பும் நோக்கத்தோடு செயலாற்றிய ரோட்டரி சங்கத்திற்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

எளிய குடும்பத்தில் இருந்து இன்னும் ஒரு மருத்துவர்

படம்
செங்கமங்கலம் சுப்பிரமணியன், கல்யாணி இணையரின் அன்பு மகள் ஸ்ரீதுர்கா மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்த ஸ்ரீதுர்கா, நீட் தேர்வு எழுத ஆயத்தமாகி வந்தார். 2022-ல் மேல்நிலைக் கல்வியை முடித்த இவர் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.  தற்பொழுது நீட் தேர்வில் 509 மதிப்பெண் பெற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பைத் தொடர உள்ளார்.  சிறுவயது முதலே மருத்துவப் படிப்பின் மீது தீரா காதல் கொண்ட துர்கா தனது கடும் உழைப்பினால் மருத்துவ படிப்பில் அடியெடுத்து வைத்துள்ளார்.  முற்றிலும் ஊரகப் பின்னணி கொண்ட ஒரு வேளாண் சார்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த துர்கா அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று இன்று சாதித்துக் காட்டி இருக்கிறார்.  எளியவர்கள் ஏற்றம் பெறும் பொழுது ஒட்டுமொத்த சமூகமும் அதன் பலனை பெற்றே தீரும்.    துர்காவை போன்றே அரசுப் பள்ளிகளில் தனது கல்விக் கனவுகளை சுமந்து பயின்ற

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆவணம் அரசுப்பள்ளி மாணவன் ஹரிஷ்

படம்
ஒன்றாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் ஹரிஷ்.  ஆசிரியர் முருகையன், ஆசிரியர் சகுந்தலா இணையரின் மகன்.   ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற ஹரிஷ் நீட் தேர்வுக்கான பயிற்சியை கடந்த ஓராண்டாக மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 547 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட ஹரிஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து மருத்துவப் படிப்பை தொடர உள்ளார்.  ஹரிஷின் வெற்றி, அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பெரும் நம்பிக்கை.   தொடக்கத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அரசுப் பள்ளியை தேர்வு செய்து தனது பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்த ஹரிஷ் -ன் பெற்றோர்களான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முருகையன் - சகுந்தலா இருவருக்கும், மாணவனை உருவாக்கிய ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும்,  தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்ட மாணவன் ஹரிசுக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வண்ணமயமான விளையாட்டு விழா

படம்
அரசுப் பள்ளிகளில் விளையாட்டு விழா என்பது பெரும் கொண்டாட்டம். இலக்கியப் போட்டிகள் ஒரு சில மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். விளையாட்டு விழா என்பது எல்லா மாணவர்களுக்கும் மன மகிழ்ச்சியை உருவாக்கும்.   பள்ளி வளாகம் எங்கும் வண்ண வண்ண கொடிகள் பறக்கும். ஒலிம்பிக் போட்டியை போன்று ஒலிம்பிக் சுடர் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்து மாணவ விளையாட்டு வீரரால் தொடர் ஓட்டமாக பள்ளி வளாக விளையாட்டு மைதானம் வரை எடுத்து வரப்படும். அந்த மாணவ விளையாட்டு வீரரின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. விளையாட்டு மைதானத்தில் சிறப்பு விருந்தினர்களால் ஒலிம்பிக் கொடி  ஏற்றி வைக்கப்படும். விளையாட்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களை ஒலிம்பிக் வீரர்களைப் போன்றே நினைத்துக் கொண்டு போட்டிகளில் பங்கேற்பது பரவசத்தை ஏற்படுத்தும்.  ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் மூன்று அடுக்கு வெற்றிப் படிகளில் ஏறி நின்று பதக்கத்தையும் சான்றிதழ்களையும் பெறும் பொழுது மாணவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மாணவர்கள் எந்த பள்ளியில் இருந்து வருகிறார்களோ அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எழுப்பும் கரவொலி ஒட்டுமொத்த வ

செங்கமங்கலம் அரசுப் பள்ளியில் மரம் நடு விழா

படம்
தஞ்சாவூர் மாவட்டம், செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.   பள்ளி வளாகத்தில் முகப்பு கட்டிடத்திற்கு எதிரில் நிழல் தரும் வகையில் வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் பசுமை சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு வேளாண் அறிவியல் துறையில் பட்டயம் பயின்ற செங்கமங்கலம் இரா சீனிவாசன் தானாக முன்வந்து மரக்கன்றுகளை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார்.   இந்நிகழ்வில் தமிழ்நாடு அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.   பொறுப்புத் தலைமை ஆசிரியர் சிலம்பரசன் அவர்களின் தலைமையில் பள்ளி மாணவர்களின் பெரும் பங்களிப்போடு இந்த மரக்கன்று நடும் விழா கொண்டாட்டமாக நடைபெற்றது.   பள்ளி வளாகத்தை நிழல் தரும் மரங்களால் பசுமையாக மாற்றிட நடவு செய்த மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிப்போம் என்று பள்ளி மாணவர்கள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.   நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவிகளின் அணிவகுப்பு, மாணவர்களின் சிலம்பம் பேராவூரணி அரசு கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற விடுதலை நாள் விழா!

படம்
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விடுதலை நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.   இதுவரை நடைபெறாத வகையில் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை கல்லூரி முதல்வர் முனைவர் திருமலைச்சாமி ஏற்றுக்கொண்டார் கொண்டார்.   முன்னதாக கல்லூரி முதல்வரை சந்தித்த மாணவிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மட்டுமே அணிவகுப்பு நிகழ்வை நடத்துகிறார்கள், மாணவிகள் நடத்தக் கூடாதா? என்று கேட்க கல்லூரி முதல்வர், மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்துள்ளார்.   பேராவூரணி அரசு கல்லூரி வரலாற்றில் மாணவிகளின் அணிவகுப்பு நிகழ்வு மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து இரண்டாம் ஆண்டு இளநிலை கணிப்பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவி சந்தியா கூறியது," ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மட்டுமே அணிவகுப்பு நிகழ்த்துவார்கள், மாணவிகள் நடத்தினால் நல்லா இருக்கும்ல! அப்படின்னு தோணுச்சு முதல்வர்ட்ட கேட்டோம். உடனே மகிழ்ச்சியா அனுமதி கொடுத்துட்டாங்க. எங்க சீனியர் அண்ணங்க எங்களுக்கு எப்படி அணிவகுப்பு நடத்தணும்னு பயிற்சி குடுத்தாங்க. இன்னைக்கு நாங்க நடத்தின அணி வகுப்பு கல்லூரியில் பேசுபொருளா மாறிப்போச்ச

பள்ளி வளாகத்தில் இந்திய வரைபடத்தை வரைந்து விடுதலை நாள் விழா - செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை

படம்
பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் பள்ளி வளாகத்திற்கு முன்பு மிகப் பிரம்மாண்டமான இந்திய தேச வரைபடத்தை மாணவர்கள் வரைந்து வைத்து விடுதலை நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.  பள்ளியின் ஓவிய ஆசிரியர் இளங்கோவன் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்தச் சாதனையை மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.  விடுதலை நாள் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஈகை செல்வம் உள்ளிட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்வி வளர்ச்சி குழு பொறுப்பாளர்கள், பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சிலம்பரசன் உள்ளிட்ட ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலைப் போராட்ட வீரர் பேராவூரணி மண்ணின் மைந்தர் ஐயா மருதையா செட்டியார்

படம்
இந்திய விடுதலை என்பது 300 ஆண்டுகால வேள்வி.  வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற குறு நில மன்னர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட விடுதலைக் கருத்தியல், மக்களாட்சியாய் மலர்ந்ததும் பேரெழுச்சி பெற்றது. முப்பது கோடி முகமுடைய இந்திய துணைக் கண்டத்தின் ஒவ்வொருவரின் கனவாக கனன்று கொண்டிருந்தது போராட்ட நெருப்பு.   மகாத்மா காந்தியடிகள் தலைமையில் அகிம்சை முறையிலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ராணுவ கட்டமைப்போடும் இந்திய விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது.  தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழர் வஉசி, மகாகவி பாரதியார், திருப்பூர் குமரன், சிந்தனை சிற்பி சிங்காரவேலர், கர்மவீரர் காமராஜர் என எண்ணற்ற தலைவர்கள் தங்கள் வாழ்க்கையை விடுதலைப் போராட்டத்திற்காக ஒப்புக் கொடுத்தனர்.  அவர்களைப் பின்பற்றி லட்சக்கணக்கான தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் என இந்திய விடுதலைக்கு போராடிய வீரர்கள் வரிசையில் போற்றப்பட வேண்டிய எண்ணற்ற எளிய மனிதர்கள் நம் நினைவுகளில் இல்லாமல் இந் நிலத்தில் புத

விடுதலை நாள் விழா- பேராவூரணி பெண்கள் பள்ளிக்கு அறிவியல் ஆய்வகக்கருவிகளை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர்

படம்
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  நிகழ்வில் பள்ளி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  விழாவில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு 10, 11, 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளை கொடுத்து வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் அறிவியல் ஆய்வகங்களுக்கு தேவையான ஆறு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புடைய ஆய்வக கருவிகளை வழங்கி  ஆய்வக அறையை திறந்து வைத்தார்.   சட்டமன்ற உறுப்பினர் தனது உரையில், பள்ளிக்குத் தேவையான விழா மேடையை அமைத்து தருவதாகவும், அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து நிகழ்வுகளை நடத்தும் வகையில் விழா அரங்கம் அமைத்திடவும், பழுதடைந்த தரைத் தளத்தை புதுப்பித்து தரவும், மாணவிகளின் உடனடி தேவையான நான்கு கழிவறைகளை அமைத்துக் கொடுத்திடவும், பகுதி பகுதியாக இரண்டு ஆண்டுகளில் சுற்றுச்சுவரை நிறைவு செய்து தருவதாகவும் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர்,

கழுமங்குடா தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் -

படம்
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தின் வட்டார கல்வி அலுவலர்  மா.க.இராமமூர்த்தி  கலந்து கொண்டார்.  நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக மு.ஆர்த்தியா, துணைத் தலைவராக கா.கார்த்திகா ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் கி.ஷாஜிதா தேர்வு செய்யப்பட்டனர் மேலும் ஆசிரியர் பிரதிநிதி ,பெற்றோர் பிரதிநிதிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவிக் குழு உறுப்பினர், முன்னாள் மாணவ உறுப்பினர்(பெற்றோர்) முன்னாள் மாணவ உறுப்பினர்(பொது) என 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.   அதன்பின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பள்ளி வளர்ச்சி குறித்தும் தங்களின் நோக்கம் குறித்தும் பெற்றோர்களிடம் உரையாடினர்.  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்ட பதிவேட்டில் கையொப்பமிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். வட்டார கல்வி அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள்

விளிம்பு நிலை மாணவர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தி உயர்ந்த பின் ஒழுக்கத்தை கைவிடக் கூடாது - தமிழ்நாடு அறக்கட்டளை முதன்மை அதிகாரி பேச்சு

படம்
இராமநாதபுரம், மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் இசைக்கருவிகள் மற்றும் மேடைச் சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.   பள்ளித் தலைமை ஆசிரியர் சரவண மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பயனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் க.இளங்கோ‌.  அவர் தமது உரையில்,  "தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்த நான், வாய்ப்புகள் மறுக்கப்படும் மக்களுக்கு உதவிடவே இப்பணியை  ஏற்றுக் கொண்டேன்.   தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து அந்தப் பள்ளிகளில் படிக்கும் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களின் நலனுக்காக கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.   இந்த மாவட்டத்தில் தேவிபட்டினம், உப்பூர் மேல்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பார்வைத் திறன் குன்றிய மாணவர்களுக்கான பள்ளிகளில் அவர்களுக்கு தேவையான கருவிகளைப் பெற்றுத் தருகிறோம்.   மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம