பசுந்தாள் உரம் நிலத்தின் வளம்- வேளாண் துணை இயக்குனர் பேச்சு
பயனாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப் பட்டதா? என்றும் உழவர்களை கேட்டறிந்தார்.
பேராவூரணி முதன்மை விரிவாக்க மையத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறட்சியை தாங்கி வளரக்கூடிய சொர்ணாசப் நெல் விதைகளை, இடு பொருட்களுடன் விவசாயிகளுக்கு வழங்கினார்.
மேலும் காலகம் கிராமத்திற்கு உட்பட்ட அஞ்சுரணிக்காடு பகுதியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் உழவர் வயல் நாள் விழாவில் பங்கேற்று பசுந்தாள் உரங்களின் பயன்பாடு குறித்து தொழில்நுட்ப விளக்கம் அளித்தார்.
நிகழ்வில் டிராக்டர் கொண்டு பசுந்தாள் உரப்பயிரை மடக்கி உழவு செய்து மண்ணுக்கு வளம் சேர்க்கும் தொழில்நுட்பம் செயல் விளக்கமாக செய்து காட்டப்பட்டது.
உழவர் வயல் நாள் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, பேராவூரணி தொகுதி, உதவி வேளாண்மை அலுவலர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக