திருக்குறள் மற்றும் திருவாசகம் ஆய்வாளர்களுக்கு விருது

திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  



அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க. இளங்கோ அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:


தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருவாளர்கள் கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திருக்குறள் மற்றும் திருவாசகம் ஆய்வாளர்களுக்கான விருதுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் உள்ளடக்கியதாகும்.



விருத்தாளர்களை தேர்வு செய்வதற்கு உரிய ஆய்வாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்ப படிவத்தினை அறக்கட்டளையின் இணையதளமான www.tnfindia.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



விண்ணப்பங்கள் 10.10.2024 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள், தமிழ்நாடு அறக்கட்டளை, எண்: 27, டெய்லர்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்னும் முகவரிக்கு அனுப்பி வைத்தடல் வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.



இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா