செங்கமங்கலம் அரசுப் பள்ளியில் மரம் நடு விழா

தஞ்சாவூர் மாவட்டம், செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  

பள்ளி வளாகத்தில் முகப்பு கட்டிடத்திற்கு எதிரில் நிழல் தரும் வகையில் வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் பசுமை சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு வேளாண் அறிவியல் துறையில் பட்டயம் பயின்ற செங்கமங்கலம் இரா சீனிவாசன் தானாக முன்வந்து மரக்கன்றுகளை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.  

பொறுப்புத் தலைமை ஆசிரியர் சிலம்பரசன் அவர்களின் தலைமையில் பள்ளி மாணவர்களின் பெரும் பங்களிப்போடு இந்த மரக்கன்று நடும் விழா கொண்டாட்டமாக நடைபெற்றது.  

பள்ளி வளாகத்தை நிழல் தரும் மரங்களால் பசுமையாக மாற்றிட நடவு செய்த மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிப்போம் என்று பள்ளி மாணவர்கள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.  

நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா