எளிய குடும்பத்தில் இருந்து இன்னும் ஒரு மருத்துவர்

செங்கமங்கலம் சுப்பிரமணியன், கல்யாணி இணையரின் அன்பு மகள் ஸ்ரீதுர்கா மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்த ஸ்ரீதுர்கா, நீட் தேர்வு எழுத ஆயத்தமாகி வந்தார். 2022-ல் மேல்நிலைக் கல்வியை முடித்த இவர் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 


தற்பொழுது நீட் தேர்வில் 509 மதிப்பெண் பெற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பைத் தொடர உள்ளார். 


சிறுவயது முதலே மருத்துவப் படிப்பின் மீது தீரா காதல் கொண்ட துர்கா தனது கடும் உழைப்பினால் மருத்துவ படிப்பில் அடியெடுத்து வைத்துள்ளார். 


முற்றிலும் ஊரகப் பின்னணி கொண்ட ஒரு வேளாண் சார்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த துர்கா அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று இன்று சாதித்துக் காட்டி இருக்கிறார். 


எளியவர்கள் ஏற்றம் பெறும் பொழுது ஒட்டுமொத்த சமூகமும் அதன் பலனை பெற்றே தீரும்.   


துர்காவை போன்றே அரசுப் பள்ளிகளில் தனது கல்விக் கனவுகளை சுமந்து பயின்று வரும் பிள்ளைகளுக்கு ஸ்ரீதுர்கா பெரும் நம்பிக்கை.  


ஸ்ரீதுர்காவை வழி நடத்திய அத்தனை ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.


கொரோனா கொடுந்துயர் காலத்தில் கொத்துக்கொத்தாய் செத்து மடிந்த மனித உயிர்களைக் கண்டு கலக்கமுற்று, மருத்துவம் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியதாக கூறும் ஸ்ரீதுர்கா மருத்துவத்துறையில் உயர் படிப்புகளை எட்டிப் பிடிக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா