ஜவுளி வியாபாரியின் மகள் சாதனை
சிறுவயது முதலே மருத்துவராவதை இலக்காக கொண்டு படித்து வந்த ஸ்ரேயா பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டார்.
"நாங்க பட்ட கஷ்டம் எங்க புள்ளைங்க படக்கூடாதுன்னு தான் ஆசைப்பட்டோம். எங்க புள்ளைங்க பொறுப்போடு படிச்சு இன்னைக்கு மருத்துவராக போகுதுன்னா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு கிடைச்சிருந்ததுன்னா என்னால ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாது. அரசு கல்லூரியில இடம் கிடைச்சதால ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நம்ம பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சதா நினைச்சு பெருமையா இருக்கு. நிறைய பேரு பொம்பள புள்ளைய ஏன் படிக்க வைக்கிற அப்படின்னு கேட்டாங்க. ரெண்டு வருஷமா நீட்டுக்கு படிச்சுக்கிட்டு இருக்கா வேற ஏதாவது படிக்க வைக்கலாமில்ல அப்படின்னு நிறைய பேரு சொன்னாங்க. நானும் கூட கஷ்டமா இருந்தா கவலைப்படாதம்மா வேற படிக்கலாம் அப்படின்னு பொண்ணு கிட்ட சொல்லி பார்த்தேன். ஆனா என் பொண்ணு நிச்சயம் நல்ல மார்க் வாங்குவேன்பா அப்படின்னு சொன்னாங்க. இன்னைக்கு சாதித்து காட்டி இருக்காங்க. இன்னும் அஞ்சு வருஷத்துல என் பொண்ணு டாக்டர் ஸ்ரேயா" சொல்லும்போது தந்தை சிவகுமாரின் கண்களில் நீர் அரும்புகிறது.
"என் பொண்ணோட கனவு டாக்டராகணும்கிறது. அதுக்காக நாங்க ரொம்பவே கஷ்டப்பட்டோம். இன்னைக்கு கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருக்கு. எனக்கு தரையில நடக்கிறது மாதிரியே தெரியல. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு" மகிழ்கிறார் ஸ்ரேயாவின் அம்மா ஜோதி.
எளிய குடும்பத்துப் பிள்ளைகள் ஏற்றம் பெறும் பொழுது ஒட்டுமொத்த சமூகமும் மாற்றம் பெறும். வாழ்த்துக்கள் ஸ்ரேயா.
கருத்துகள்
கருத்துரையிடுக