பள்ளி வளாகத்தில் இந்திய வரைபடத்தை வரைந்து விடுதலை நாள் விழா - செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை

பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பள்ளி வளாகத்திற்கு முன்பு மிகப் பிரம்மாண்டமான இந்திய தேச வரைபடத்தை மாணவர்கள் வரைந்து வைத்து விடுதலை நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். 


பள்ளியின் ஓவிய ஆசிரியர் இளங்கோவன் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்தச் சாதனையை மாணவர்கள் நிகழ்த்தினார்கள். 


விடுதலை நாள் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஈகை செல்வம் உள்ளிட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்வி வளர்ச்சி குழு பொறுப்பாளர்கள், பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சிலம்பரசன் உள்ளிட்ட ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா