பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா
பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் தொடர்ந்து நற்பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
எளியவர்களுக்கு உதவுவதல், அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தல் என தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள் பேராவூரணி ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள்.
இன்று 25. 08. 2024 காலை பேருந்து நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மா, பலா, தேக்கு, நெல்லி, கொய்யா மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்டத் துணை ஆளுநர் கேபிஎல் ரமேஷ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
பசுமை சூழலை பரப்பும் நோக்கத்தோடு செயலாற்றிய ரோட்டரி சங்கத்திற்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக