விடுதலை நாள் விழா- பேராவூரணி பெண்கள் பள்ளிக்கு அறிவியல் ஆய்வகக்கருவிகளை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர்
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் பள்ளி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு 10, 11, 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளை கொடுத்து வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளியின் அறிவியல் ஆய்வகங்களுக்கு தேவையான ஆறு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புடைய ஆய்வக கருவிகளை வழங்கி ஆய்வக அறையை திறந்து வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் தனது உரையில், பள்ளிக்குத் தேவையான விழா மேடையை அமைத்து தருவதாகவும், அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து நிகழ்வுகளை நடத்தும் வகையில் விழா அரங்கம் அமைத்திடவும், பழுதடைந்த தரைத் தளத்தை புதுப்பித்து தரவும், மாணவிகளின் உடனடி தேவையான நான்கு கழிவறைகளை அமைத்துக் கொடுத்திடவும், பகுதி பகுதியாக இரண்டு ஆண்டுகளில் சுற்றுச்சுவரை நிறைவு செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், உறுப்பினர் ஹபீபா ஃபாருக், பள்ளியின் புரவலர்கள் க.அன்பழகன், சுப.சேகர், கவிஞர் அப்துல் மஜீத், தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக