கழுமங்குடா தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் -

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தின் வட்டார கல்வி அலுவலர்  மா.க.இராமமூர்த்தி  கலந்து கொண்டார். 


நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக மு.ஆர்த்தியா, துணைத் தலைவராக கா.கார்த்திகா ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் கி.ஷாஜிதா தேர்வு செய்யப்பட்டனர் மேலும் ஆசிரியர் பிரதிநிதி ,பெற்றோர் பிரதிநிதிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவிக் குழு உறுப்பினர், முன்னாள் மாணவ உறுப்பினர்(பெற்றோர்) முன்னாள் மாணவ உறுப்பினர்(பொது) என 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 


 அதன்பின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பள்ளி வளர்ச்சி குறித்தும் தங்களின் நோக்கம் குறித்தும் பெற்றோர்களிடம் உரையாடினர். 


பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்ட பதிவேட்டில் கையொப்பமிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.


வட்டார கல்வி அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். 


முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 

பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.ஷஜிதா, ஆசிரியர்கள் தி.அந்தோணி சகாய ராஜூலா, அ.செய்யது அலி பாத்திமா, கோ.சு.அம்பிகா, மு.பிந்துகுமாரி, மாணவர்களின் பெற்றோர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் என்.சாகுல்ஹமீது, வார்டு உறுப்பினர் பா.பானுமதி மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டம் நாட்டுப்பண் பாடிய பிறகு இனிதே நிறைவு பெற்றது.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா