திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆவணம் அரசுப்பள்ளி மாணவன் ஹரிஷ்


ஒன்றாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் ஹரிஷ். 


ஆசிரியர் முருகையன், ஆசிரியர் சகுந்தலா இணையரின் மகன்.  


ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற ஹரிஷ் நீட் தேர்வுக்கான பயிற்சியை கடந்த ஓராண்டாக மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


547 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட ஹரிஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து மருத்துவப் படிப்பை தொடர உள்ளார். 


ஹரிஷின் வெற்றி, அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பெரும் நம்பிக்கை.  


தொடக்கத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அரசுப் பள்ளியை தேர்வு செய்து தனது பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்த ஹரிஷ் -ன் பெற்றோர்களான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முருகையன் - சகுந்தலா இருவருக்கும்,

மாணவனை உருவாக்கிய ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும், 

தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்ட மாணவன் ஹரிசுக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா