குருவிக்கரம்பையில் இருந்து கன்னியாகுமரி - சாதித்த அரசு பள்ளி மாணவன்
சிறு வயது தொடங்கி மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்து வந்த சிவசுப்பிரமணியன் 12-ம் வகுப்புக்குப் பிறகு நீட் தேர்வுக்கு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பை பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு கிடைக்கப்பெற்று தற்பொழுது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படிக்க உள்ளார். சிவசுப்பிரமணியன் நீட் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் 530.
"எங்க ஊர்லையே நான் தான் முதல் மருத்துவர்" என்று பெருமை பொங்க கூறும் சிவசுப்பிரமணியன் அவர் குடும்பத்தில் முதன் முதலாக உயர் கல்வியை எட்டிப் பிடித்துள்ளவர்.
அப்பா கருப்பையன் ஒரு விவசாய கூலித் தொழிலாளி. அம்மா வள்ளி இல்லத்தரசி. அண்ணன் மகேஸ்வரன் இயந்திரவியலில் பட்டயம் படித்தவர், இந்தக் குடும்பத்திலிருந்து சிவசுப்பிரமணியன் மருத்துவராக மலரப் போகிறார்.
தங்கள் பள்ளி மாணவனின் வெற்றியை பதாகை வைத்து கொண்டாடி மகிழ்கிறது குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்.
தலைமுறை மாற்றத்திற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ள சிவசுப்பிரமணியன் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்குமான மனிதராக வளர்ந்திட மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.
சிவசுப்பிரமணியனின் தொடர் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஆசிரியர்களை புறந்தள்ளும் வழக்கமான மாணவர்கள்/ வழக்கமானவர்கள்.
பதிலளிநீக்கு