பள்ளிக்கு இருக்கை வழங்கிய தாய் - எஸ்.எம்.சி. கூட்டத்தில் பாராட்டு

பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   


இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் நிரஞ்சன் என்ற மாணவனின் தாய் தன் மகனோடு படிக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் வகுப்பறையில் அமர்ந்து படிக்க நாற்காலிகளை வழங்கினார்.  சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகளை பள்ளிக்கு இலவசமாக வழங்கிய இவர், தனது மகன் படிக்கும் வகுப்புப் பிள்ளைகள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்து படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் குட்டி நாற்காலிகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.  


கொடை வழங்கிய நிரஞ்சனின் பெற்றோர் நிஷாந்தி - சிவனேசன் இணையருக்கு பள்ளி மேலாண்மை குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  


முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவி நித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர் ஷீலா ராணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹபீபா ஃபாரூக், பெற்றோர் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியரும் எஸ்.எம்.சி. ஆசிரிய உறுப்பினருமான காஜா முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தி நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.  


நிகழ்வில் குறுவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கபட்டது.


தனது பிள்ளை போலவே பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வசதியை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல் புரிந்த பள்ளியின் பெற்றோருக்கு மெய்ச்சுடரின் அன்பும் வாழ்த்துகளும். 


வாழ்த்துகளுடன்...

ஆசிரியர், மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா