பேராவூரணியில் புதுப்பொலிவுடன் ரமா மகளிர் ஆடையகம்
வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் முன்பாக, சந்தை எதிரில் செயல்பட்டு வந்த ரமா டெக்ஸ் தற்பொழுது மீண்டும் ரமா மகளிர் ஆடையகமாக வளர உள்ளது.
போட்டிகள் நிறைந்த வணிக உலகில் நுகர்வு கலாச்சாரத்தை வாடிக்கையாளர்களிடம் திணித்து பெரும் முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. வாடிக்கையாளர் நலன் என்ற பெயரில் செய்யப்படும் ஆடம்பர செலவுகளும் வாடிக்கையாளர்கள் தலையிலேயே கட்டப்படுகிறது. எளிமையான வணிக முறைகள் மறைந்து வருகின்றன.
இல்லத்திலேயே குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு சிறு தொழிலாய் செய்யப்படும் வணிக முறைகள் மறைந்து அதன் வாய்ப்புகளையும் பெரும் வணிக நிறுவனங்கள் சுவைத்து செரிக்கின்றன.
கனிவான சொல், வாடிக்கையாளர் நலன், தரமான ஆடைகளை குறைந்த விலைக்கு தர வேண்டும் என்கிற பேரவா, ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அதனால் வாடிக்கையாளர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் விலை உயர்வை தடுத்து குறைந்த விலைக்கு மகளிர் ஆடைகளை வழங்கும் நோக்கத்தோடு ரமா மகளிர் ஆடையகம் வீட்டின் ஒரு பகுதியில் தொடங்கப்படுவதாக இந்தச் சிறு வணிகத்தை தொடங்க உள்ள அன்புத் தோழர் த. பழனிவேல் கூறுகிறார்.
தோழர் பழனிவேல், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் கல்விச் செயற்பாட்டாளர்.
தோழமை உறவுகள் இச்சிறு வணிகத்தை ஆதரிக்க வேண்டுகிறோம்.
வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக