பேராவூரணியில் பாரதியார் பிறந்தநாள் விழா
பாரதி கலை இலக்கிய பேரவை, பேராவூரணி தமிழ் மன்றம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், திருக்குறள் பேரவை, தமிழ்வழிக் கல்வி இயக்கம் போன்ற அமைப்புகளின் சார்பில் பொறுப்பாளர்கள் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதியாரின் புகழ் ஓங்குக, பெண்ணுரிமை போற்றுவோம், மனிதநேயம் காத்திடுவோம்,
மதவாதம் ஒழித்திடுவோம் போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேராவூரணி தமிழ் மன்றம் பொறுப்பாளர்கள் புலவர் சு.போசு, பாரதி வை நடராஜன், பாரதி கலை இலக்கிய பேரவை கே வி கிருஷ்ணன், கே பி சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் மூர்த்தி, பன்னீர்செல்வம், வட்டார செய்தியாளர்கள் சங்கத் தலைவர் கான்முகமது, திருக்குறள் பேரவை செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஜகுபர் அலி, கணேசன் கொத்தனார், பொன் காடு கணேசன், தோழர் நடேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.

கருத்துகள்
கருத்துரையிடுக