ராயவரம் பள்ளியில் நூலக வார விழா
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நூலக வார விழா கொண்டாடப் பெற்று வருகிறது. அறக்கட்டளையின் அகடமிக் பிரிட்ஜ் கோர்ஸ் நடைமுறையில் உள்ள பள்ளிகளில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் மாணவர்களைக் கொண்டு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டிகள் ராயவரம் சு கதி காந்தி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
57வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற இந்த போட்டிகளில் ராயவரம் சு கதி காந்தி உயர்நிலைப் பள்ளி மாணவி ஜனனி கட்டுரை போட்டியில் முதலிடமும், மாணவி தாட்சாயினி பேச்சுப்போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் வெற்றிக் கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் நா வெங்கடேசன் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக