தாய்மையைப் போற்றியவர்
எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பதுகளிலும் கருவுற்ற தாய்மார்களின் கடவுளாக காட்சி தந்தவர். இந்த காலகட்டங்களில் தான் மருத்துவமனைக்கு வந்து மகப்பேறு சிகிச்சை பெறுவது தொடங்கி இருந்து.
அந்த காலங்களில் குழந்தை பிறப்புகள் வீட்டில் தான் நடந்தது. மகப்பேறு என்பது மரணத்தோடு போராடி வெல்வது.
இனம் புரியாத வெவ்வேறு விதமான வலிகளின் காரணங்களை புரிந்து கொள்ள முடியாமல் கருவுற்ற தாய்மார்கள் புலம்பிய காலம்.
அந்த காலத்தில் கருவுற்ற தாய்மார்களின் கரங்களைப் பற்றி ஊக்கம் கொடுத்து புதிய புதிய மனித உயிர்களை இந்த உலகுக்கு வரவேற்றவர் மருத்துவர் இராஜலட்சுமி.
பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலராக பணியாற்றியவர்.
நமது ஊரகப் பகுதிகளில் கொத்துக் கொத்தாக பரவிய தொற்று நோய்களுக்கு பல உயிர்களை பலி கொடுத்து வந்த மருத்துவ அறிவியலின் தொடக்க காலத்தில் மருத்துவமனைகளின் பயனை மக்களிடம் பரப்பியவர்.
குறிப்பாக நம் பகுதிகளில் பெண்கள் மருத்துவம் படிக்க முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
எனது தாய்க்கு மகப்பேறு சிகிச்சை வழங்கி என்னை இவ்வுலகுக்கு முதலில் கரம் பிடித்துத் தூக்கியவர் இந்த மருத்துவர் தான் என்பதை அறிந்த பொழுது கண்கள் பனித்தன.
மருத்துவர் ராஜலட்சுமி அவர்களை பேராவூரணி மருத்துவ உலகம் என்றென்றும் நினைவில் கொள்ளும். மருத்துவருக்கு புகழஞ்சலி.
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.

கருத்துகள்
கருத்துரையிடுக