ஜவுளி வியாபாரியின் மகள் சாதனை
பேராவூரணி ஜவுளி வியாபாரி சிவக்குமார் இல்லத்தரசி ஜோதி இவர்களின் மகள் ஸ்ரேயா மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 627 மதிப்பெண்கள் பெற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக படிப்பதற்கு வாய்ப்பு பெற்றுள்ளார். சிறுவயது முதலே மருத்துவராவதை இலக்காக கொண்டு படித்து வந்த ஸ்ரேயா பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டார். "நாங்க பட்ட கஷ்டம் எங்க புள்ளைங்க படக்கூடாதுன்னு தான் ஆசைப்பட்டோம். எங்க புள்ளைங்க பொறுப்போடு படிச்சு இன்னைக்கு மருத்துவராக போகுதுன்னா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு கிடைச்சிருந்ததுன்னா என்னால ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாது. அரசு கல்லூரியில இடம் கிடைச்சதால ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நம்ம பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சதா நினைச்சு பெருமையா இருக்கு. நிறைய பேரு பொம்பள புள்ளைய ஏன் படிக்க வைக்கிற அப்படின்னு கேட்டாங்க. ரெண்டு வருஷமா நீட்டுக்கு படிச்சுக்கிட்டு இருக்கா வேற ஏதாவது படிக்க வைக்கலாமில்ல அப்படின்னு நிறைய பேரு சொன்னாங்க. நானும் கூட