திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சி கூடத்தின் வெற்றியாளர்கள் பட்டியல் தொடங்கியது!
பேராவூரணியில் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
நகர வர்த்தகர் கழக கட்டடத்தில் நடைபெற்று வரும் இந்த பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பெரும் முயற்சியால் நீதிமன்ற பணியாளர் தேர்வில் வெற்றி வாகை சூடி இருக்கிறார் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சுபா.
பயிற்சி காலங்களில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பயிற்சி மையம் வழங்கும் பரிசினை தொடர்ந்து பெற்று வருபவர் சுபா.
பேராவூரணி பயிற்சிக் கூடத்தின் முதல் வெற்றியாளராக தனது பெயரை பதிவு செய்து பயிற்சிக்கு உயிரூட்டி இருக்கிறார் ஆவுடையார்கோவில் சுபா.
இன்று 10.02.2023 காலை அறந்தாங்கி நீதிமன்றத்தில் தனது அரசுப் பணியை தொடங்குகிறார்.
ஏழைகளுக்கும், ஊரகப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் எட்டாக்கனி என்று கூறப்படும் அரசுப் பணியை தனது கடின உழைப்பின் மூலம் எட்டிப்பிடித்த சுபா அவர்களின் முயற்சி தலைமுறையையே மாற்றும் என்பதில் ஐயமில்லை.
பேராவூரணி பகுதியில் இப் பயிற்சிக் கூடத்தை தொடர்ந்து நடத்திட வழிகாட்டி வரும் பேராவூரணி வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர், வருவாய்த்துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், திருவள்ளுவர் பயிற்சி கூடத்தின் தன்னார்வலர்கள் அனைவருக்கும் மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.
படங்கள்: மையத்தில் அதிக மதிப்பெண் பெற்று பரிசு பெறும் வெற்றியாளர் சுபா.
கருத்துகள்
கருத்துரையிடுக