பொன்னாங்கண்ணிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவிகள் சாதனை



தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான வளைகோல் பந்து (ஹாக்கி) விளையாட்டில் பொன்னாங்கண்ணிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
16 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான இந்தப் போட்டி கடந்த 07.02.2023 அன்று தஞ்சாவூர் சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தங்களை விட வயதில் மூத்த உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் விளையாட்டு மாணவிகளோடு விளையாடி நம் பகுதி நடுநிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கான பரிசுத்தொகை ரூபாய் 18 ஆயிரத்தை வென்று இருக்கிறார்கள்.
கிராமப் பகுதியில், விளையாட்டு திடல் இல்லாத ஒரு பள்ளியில் இருந்து மாணவர்களை தகுதிப்படுத்தி போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இப்பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் புகழ் கௌரி.
மிகுந்த ஈடுபட்டுடன் மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்தி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து வரும் ஆசிரியர் புகழ் கௌரி அவர்களுக்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
போட்டிகளில் பங்கேற்கச் சென்ற மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மெய்ச்சுடர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
படம்: கோப்பு படம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா