ஆலய வாசலில் ஆபாச அர்ச்சனை! சனாதனத்தின் சாக்கடை சிந்தனை! தமிழ்நாடு அரசே நடவடிக்கை எடு!
அன்புமிக்க தமிழ் உறவுகளே!
ஒரு பக்கம் பெரியார் மண் என்றும், திருக்குறள் நெறி பரப்பும் தமிழ்நாடு என்றும் திராவிட மாடல் என்றும் கூறிக் கொள்கிறோம். ஆனால் இதற்கு நேர் எதிராக சமூக குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டும் காணாமல் கடந்து செல்வது என்ன நியாயம்?
பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஒரு இளைஞர் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதற்காக வெறிபிடித்த ஒருவன் ஆபாச வார்த்தைகளால் அந்த இளைஞரை தாக்கும் காட்சிகள் இந்த காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த ஒரு சகோதரர் கோவிலுக்குள் நுழைந்து விட்டார் என்பதற்காக ஆலய வாசலில் ஆபாச வார்த்தைகளால் பெரும் கூச்சலிடும் இவன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
இவனுக்கு ஆதரவாக கூட்டத்தில் நின்று கொண்டு கூச்சலிட்ட நெற்றி நிறைய திருநீறு பூசி நின்றவன் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் மலத்தைக் கலந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ஆலயத்திற்குள் அனுமதி மறுக்கும் சாதிவெறி பிடித்தவனின் ஆபாச பேச்சு வெளியாகி மீண்டும் தமிழ்நாட்டை தலைகுனிய வைத்திருக்கிறது.
சாதி சிந்தனை சமூகத்தில் நடத்தும் வெறியாட்டத்தை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்த வேண்டும்.
சாதி ஆணவத் திமிர் ஆலயங்களுக்குள் தான் அடங்க மறுக்கிறது!
பக்தர்களுக்கும் கடவுளுக்கும் இடையே நிற்கும் அர்ச்சகர்களை ஆலயங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
அவரவர் அர்ச்சனை, வழிபட்டு செய்து கொள்ளும் வகையில் ஆலய நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
கோவில்களில் முதல் மரியாதை முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும்.
சாதிக்கு மண்டகப்படி வழங்கி திருவிழா நடத்தும் நடைமுறையை நிறுத்த வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக உள்ள கோவில் நடைமுறைகளை மாற்ற தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்.
அப்போதுதான் சமூகத்திலும் சமம் என்கிற நிலையை நாம் எட்ட முடியும்.
சகோதர சகோதரிகளே!
---------------------------
இந்தக் காணொளி பதிவில் ஆபாச வார்த்தைகள் நிரம்பிக் கிடக்கிறது....
பீப் சவுண்ட் போட வேண்டும் என்றால் ஒட்டுமொத்த காணொளியும் ஒலி இல்லாமல் தான் இருக்கும்...
நமது தளத்தில் இப்படி ஒரு காணொளியை பதிவேற்றுவதற்கு வருந்துகிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக