முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கோவேந்தன் சிலை அமைத்திட கோரிக்கை
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கோவேந்தன் சிலை அமைத்திட கோரிக்கை
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் மாண்புமிகு எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள். அவருக்கு பேராவூரணி வட்டம், பூக்கொல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் சீரிய முயற்சியால்தான் பேராவூரணி தொகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தொகுதி வளர்ச்சி கண்டது. பட்டுக்கோட்டை வட்டத்திலிருந்து பேராவூரணியைப் பிரித்து பேராவூரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை, விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமணைக்குக் கூடுதல் கட்டிடம், நகரத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு சாலை வசதி, பேருந்து வழித்தடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு, பேராவூரணிப் தொகுதி வளர்ச்சியைக் கண்டது.
இவர் ஒரு பெரியாரியல் சிந்தனையாளர். ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபாண்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பெருந்தலைவராக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துவருகிறார். நேர்மைக்கும், எளிமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கக்கன் போன்ற தலைவர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படக்கூடியவர். எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் வாழ்வு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டிய வரலாறாகும். எனவே அவர் வாழ்ந்த இப்பகுதியில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் க.செய்சங்கர்.
நிச்சயமாக திரு.எம்.ஆர்.ஜி. அவர்களுக்கு அவர்களின் முழு உருவ சிலை வைத்து பெருமை சேர்க்க வேண்டும்.அவர்களின் ஆட்சி காலத்தில் மட்டுமே பேராவூரணி தொகுதி வளர்ச்சி கண்டது.அவர்களுக்கு பின்னர்.இத்துணை ஆண்டுகாலம் ஒரு அமைச்சரை பெறமுடிவவில்லை இந்த பேராவூரணி தொகுதிக்கு,இனம்,மதம் கடந்து.அவர்களின் பெருமை சேர்க்கவேண்டும்.
பதிலளிநீக்கு