பேராவூரணி சலவைத் தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு வெற்றி. டோபிகானா ஆக்கிரமிப்பை அகற்றித் தர அதிகாரிகள் உறுதி.
சங்கச் செயல்முறைகளே
வெற்றிபெறும்
பேராவூரணி
சலவைத் தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு
வெற்றி. டோபிகானா ஆக்கிரமிப்பை அகற்றித் தர அதிகாரிகள் உறுதி.
" உயர்நீதிமன்ற மதுரை
கிளையின் உத்தரவின் படி சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பில்
இருந்து மீட்டு தரவேண்டும். சலவைத்துறை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சுற்றுச்சுவர்
அமைத்து தரவேண்டும். சலவைத் தொழிலுக்கு தேவையான மருந்து மற்றும் உபகரணங்களை மானிய விலையில்
வழங்க வேண்டும். நலவாரிய உதவிகளை வழங்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும். உயர்நீதிமன்ற
உத்தரவின் படி சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கான வருவாய் கணக்குகளை
வகை மாற்றம் செய்து தரவேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
பேராவூரணி வட்டார, நகர சிஐடியு சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடர் உண்ணாவிரதம்
மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 13 அன்று வட்டாட்சியர்
அலுவலகம் அருகில் உண்ணாவிரதம் மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
.பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில்
அரசுத்தரப்பில் சிஐடியு சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர்
தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை,பொதுப்பணித்துறை, மற்றும் பேரூராட்சி
அலுவலக அதிகாரிகள் மற்றும் சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி,
வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, சலவைத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆர்.நீலமோகன்,
எஸ்.அசோகன், ஆர்.வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமாதான பேச்சு வார்த்தையில், " உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி
0.31.0 ஏர்ஸ் நிலத்தினை டோபிகானா கட்டுவதற்கு சலவை தொழிலாளர்களுக்கு நிலம் வகைமாற்றம்
செய்ய, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் மனு கொடுத்து பொதுப் பணித்துறையின்
மூலம் ஒப்புதல் அளித்து நிலம் வகைமாற்றம் செய்யலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர். மேலும் சலவைத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லையினை நிர்ணயம்
செய்த பின்னர் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றி தருகிறோம் என பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்
மூலம் உறுதியளிக்கப்பட்டது. சலவைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பல்வேறு
இயக்கங்களைச் சார்ந்தபொறுப்பாளர்களுக்கும் சி.பி.எம். கட்சி நிர்வாகிகளுக்கும்
மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.
செய்தி எஸ்.ஜகுபர்அலி
- பேராவூரணி.
கருத்துகள்
கருத்துரையிடுக