வாடிக்கையாளர் நல்லா இருந்தா! நாங்க நல்லா இருப்போம்!


வாடிக்கையாளர் நல்லா இருந்தா!
நாங்க நல்லா இருப்போம்!

            மது நாட்டுக்கு! வீட்டுக்கு! உயிருக்கு கேடு! என்ற வாசகம் ஒட்டபட்ட  மதுபாட்டில்களை தெருவிற்கு தெரு கூவி விற்கிறது நமது தமிழக அரசின் மது விலக்கு துறை. இதுதான் நமது ஆட்சியாளர்களின் மிகவும் கேவலமான வேடிக்கையான முரண்.

            ஆனால் " வாடிக்கையாளர் நல்லா இருந்ததாதான் எங்களப் போல வியபாரியெல்லாம் நல்லா இருக்க முடியும். அதுனால எங்க கடையில பீடி,சிகிரெட், புகையிலைனு... வாடிக்கையாளர் உடல் நிலையைக் கெடுக்கிற எதையுமே விற்கிறது இல்லை" என்று நம்மை வியக்க வைக்கிறார் பேராவூரணி புதுரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் வ. சாகுல் ஹமீது. இவரின் கொள்கையும், வாடிக்கையாளரை அணுகும் இவரின் இனிமையான பேச்சும் அவரின் பெட்டிக்கடையை ஒரு மினி மளிகைக் கடையாகவே மாற்றியிருக்கிறது. " நான் என் கடையில பீடி சிகரெட் விற்ற காலத்துல... சிகரெட்டை வாங்கி இந்த இடத்திலேயே பத்தவச்சுடுவாங்க... அதிலிருந்து வரும் புகை கடைக்கு வரும் குழந்தைகளை அதிகமா பாதிக்கிறத நான் கண்கூடப் பார்த்திருக்கேன். அதனால பாழாப்போன இந்த பொருட்களை இனி விற்பதில்லைனு முடிவு பண்ணிட்டேன்... அன்னையிலிருந்து எனக்கு நல்லா வியாபாரம் நடக்குது. என் கடைக்கு முன்னாடி யாரும் புகை பிடிக்கிறவுங்க இல்லாததால அதிக வாடிக்கையாளர்கள் என் கடைக்கு வர ஆரம்பிச்சாங்க. பெட்டிக்கடைன்னா பிடி சிகரெட்தான் விற்கனும்னு நெனக்க வேண்டியதில்ல... அத விற்பதால கடக்காரங்களுக்கு தொல்லைதான் அதிகம்" என்றவர் சற்று நிதானமாக " மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் விற்பது பாவம் என்கிறது திருக்கூரான். மார்க்கத்தின் படி நடக்குறோங்கிறதுல என் மனசுக்கும் திருப்த்தி" என்கிறார் சாகுல். இவரின் மன நிலை எல்லா பெட்டிக்கடைக்காரர்களுக்கும் வரவேண்டும். குறிப்பாக மக்களை போதையில் வைத்திருக்கும் தமிழக அரசு கட்டாயமாக உணர வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா