இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா)
மோடி அரசின் இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டம் புதிய திட்டமொன்றும் இல்லை. இந்தியாவில் நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தனது உற்பத்தியை இந்தியாவில் செய்ததை நாம் நன்கு அறிவோம். நம்மையும், நம் நாட்டையும் ஏமாற்றிவிட்டுச் ஓடிப்போன இதுபோன்ற நிறுவனங்களின் கதை தமிழகம் அறிந்ததுதான். இந்நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைக்கும்போது அந்நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டுமானம், தடையற்ற மின்சாரம், குடிநீர் போன்ற அனைத்தையும் செய்துகொடுத்தே நாம் அழைக்கிறோம். நமது தேவைக்கு மின்சாரம், குடிநீர் இல்லையென்றாலும் இந்நிறுவனங்களுக்கு தடையற்று வழங்கினோம். ஆனால் நாம் எதிர்கொண்டது என்ன? இங்குள்ள தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்ததுதான் மிச்சம்.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்கிறேன் என்று சொல்லி அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து நாம் நமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
உள்கட்டமைப்பை வலுப்படுத்துவோம், மானியங்களைக் குறைப்போம் என்று நமது நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிடுகிறார்.
வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் இந்தியாவின் தனிநபர் வருமானத்தில் மிகப்பெரிய வேறுபாட்டை உருவாக்குவதிலேயே காங்கிரசு அரசும் அதைத் தொடர்ந்து தற்போது ஆட்சியில் உள்ள பசக அரசும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதானிகளையும், அம்பானிகளையும் வளர்ச்சியடைய வைத்தால் போதும் இந்தியா வளர்ந்துவிடும் என்பது எப்படி சரியாக இருக்கும்.
தாராளமயம், உலக மயம் நம்மை நமது பன்பாட்டை சிதைத்து எல்லாவற்றையும் வியாபாரக் களமாக்கியுள்ளது.
கல்வி வியாபாரம், மருத்துவ வியாபாரம், பன்பாட்டுப் பரப்புரை வியாபாரம் (தருண் விஜய் செய்யும் திருக்குறள் பரப்புரை மாதிரி), ஆலய வழிபாடு கூட இன்று வியாபாரமாகிப் போய்விட்டது. இவற்றையெல்லாம் மீட்டெடுக்க மோடியிடம் கருத்து சொல்லிக் கொண்டிருந்தால் கதைக்காகாது. பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு கை பொம்மைதான் மோடி. திரளான மக்கள் விழிப்புணர்வால் மட்டுமே காங்கிரசு, பா.ச.க போன்ற முதலாளிய நேச கட்சிகளை களத்திலிருந்து அப்புறப்படுத்த முடியும்
கருத்துகள்
கருத்துரையிடுக