கயல் விழி - சிறுக​தை

கயல் விழி - சிறுக​தை
ஒன்பதாம் நம்பர் பேருந்து பெரியார் சிலை அருகில் வளைவதைப் பார்த்து அனைவரும் பேருந்தில் தொத்திக்கொள்ள ஆயத்தமானார்கள்…

 கயல்விழி மட்டும் பித்துப் பிடித்தவள் போல் உரைந்திருந்தாள்...

பாம் பாம் பாம்ம்ம்... என்ற சத்தம் கேட்டதும் உணர்வடைந்தவளாய்…
வேண்டா வெறுப்பாய் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருந்தது.
கய​லோ வேலையில் சக்கையைாய் பிழியப்பட்டு இருந்தாள்.

12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண். வறுமையின் அழுத்தத்தால் மேற்கொண்டு படிக்க முடியாதபடி அருகில் உள்ள துணிக்கடையில் சொர்ப்ப சம்மளத்திற்கு (மாதம் ரூ.1500) வேலைக்குச் சென்று வந்தாள் கயல்.

இரவு உணவும் சாப்பிடவில்லை, தூக்கமும் இல்லை, காலை உணவும் சாப்பிடவில்லை. கயலின் அழகிய விழிகள் சோர்வால் உள்ளேத் தள்ளப்பட்டு இருந்தன. பாவம் ரொம்பவே வாடிப்போயிருந்தாள் அந்த 20 வயது பெண். எப்​போதும் இவள் இப்படி இருந்ததில்​லை.

பேருந்து இருக்கையில் ​இருக்கமாய் அமர்ந்திருந்தாள்.. இ​மைகள் இ​மைக்க மறந்திருந்தது… முதல் நாள் இரவு நடந்த சம்பவ​ம் கயல்விழியின் மனதில் படமானது...

தீபாவளிக்காக இவளும், இவளின் தங்கை மலர்விழியும் கையில் மருதாணியிட்டுக்
கொண்டிருந்தனர். மலர் தன் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி வியப்பாய் கூறிக்கொண்டிருந்தாள். இவர்களின் அம்மா இருவரையும் கவனித்து மகிழ்ந்த வண்ணம் முறுக்கு மாவு பிசைந்துக்கொண்டிருந்தாள்...

யாரோ குமட்டிககொண்டு வந்தியெடுக்கும் சத்தம்…

மூன்று பேரும் விட்டுக்கு வேளியே ஓடி வந்துப் பார்த்தனர்…
கயலின் அப்பா வாந்தியெடுத்து அதிலே​யே புரண்டுகொண்டு வேட்டி விளகிக் கிடந்தார்.

உள்ளாடை அணியாமல் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாகக் கிடந்தார்...
மது வாடை அ​னைவர் நாசிகளிலும் ஏறிக் குடலைப் புரட்டியது.

சின்னவள் அலறிக்கொண்டு வீட்டுககுள் ஓடிப்போனாள்...
கயலும் பின்னாடியே அழுதுக்கொண்டு ஓடினாள்...
அக்கம் பக்கம் இருந்த பெண்கள் குழந்தைகளுடன் வீட்டுக்குள் சென்றனர்...
கயலின் அம்மா தலையிலேயே அடித்துக்கொண்டு கதறினார்.

பி.ஏ படிச்சவரு... இந்த மனுசன் ஒரு பிரவேட் பேங்ல நல்லாதான் வேலை பார்த்தாரு...இந்த இரண்டு வருசமா இப்படி குடிச்சு குடிச்சு… இ​வன் கெட்டதில்லாம...இந்த பிள்ளைகளோட வாழ்கையையும் கெடுக்கிறான் பாவி பய... என்று புலம்பியப்படி நகர்ந்தார் ஒரு பெரியவர்.

தந்தையின் கோலம்…
நி​னைத்து நி​னைத்து இரவெல்லாம் தூக்கமின்றி துக்கவீடாய் இருகிக்கிடத்தது கயலின் வீடு..
.
……பேருந்து நகர எல்லை​யைக் கடந்து ​சென்றது....

தமிழக அரசே! தமிழக அரசே!
தமிழ்ப் பெண்களின் தாலியறுக்கும்
மது விற்பனையை உடனே நிறுத்து...
ஆறறிவு மனிதனை
விலங்கை விட கேவலமாகும் மது விற்பனையை உடனே நிறுத்து...

சுமார் ஐம்பது அறுபது பெண்கள் போட்ட முழக்கம் கயல்விழியை மட்டும் அல்ல பேருந்திலிருந்த அனைவரின் கவனத்தையும் திரும்பியது.

எதையும் யோசிக்காமல் சட்டன பேருந்திலிருந்து இறங்கி பேரணிக்குள் புகுந்தாள் கயல்விழி..

உள்​ளே ​சென்ற அவளுக்கு இன்ப அதிர்ச்சி!
உடனே மகிழ்ச்சியால் விழி மலர்ந்தாள்...
மதுவுக்கு எதிரான பெண்கள் இயக்கம்
மின்னிய பதாகையை தாங்கிக்கொண்டு நின்றிந்தனர் கயலின் அம்மாவும்,தங்கையும்.

இழுத்து மூடு!...இழுத்து மூடு!...
தமிழகப் பெண்களின் வாழக்கையைச் சீரளிக்கும் மதுக்கடையை இழுத்து மூடு
ஆவேசமாய் முழங்கினாள் கயல்விழி,
இவளின் முழக்கத்தை ஆமோதித்து அத்தனை பெண்களும் முழங்கினர்...

இதைப் பார்த்த அருகில் இருந்த டாஸ்மாக் கடை ஊழியன் தலை குனிந்தான்...
இவர்கள் மூவரையும் பார்த்த கயலின் அப்பா கையில் இருந்த மது புட்டியை அவமானத்தால் தூக்கியெறிந்தார்...
மது புட்டி பல நூறாய் தெரித்து சுக்கானது !

 தா. கலைச்செல்வன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா