இந்தி வேண்டும் என்று சொல்லும் தமிழர்களே...


இந்தி வேண்டும் என்று சொல்லும் தமிழர்களே...

உங்களுக்கான பிரச்சனை என்ன?
நாம் வடநாடு சென்றால் 
வடநாட்டில் உள்ளவர்கள் நம்மை மதிப்பதில்லை என்பதுதானே? 
அவர்கள் மதிக்கவில்லை என்பது 
நீங்கள் இந்தி தெரியாதவர் என்பதால் அல்ல. 
அவர்களுக்கு மரியாதை தெரியவில்லை என்பதால். 
ஒன்றை சிந்தித்துப் பாருங்கள்... 
நம் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தும் வட நாட்டினர் எல்லாம் அங்கு பள்ளியில் தமிழைக் கற்றுக்கொண்டா தமிழகம் வருகிறார்கள்? 
இங்கு வரும் வடஇந்தியர்களை தமிழ் தெரியாதவர்கள் என்பதற்காக நாம் அவர்களை அலட்சியம் செய்கிறோமா என்ன? 
தமிழக எல்லைப் பகுதியில் பணிபுரியும் வடமாநில இராணுவவீரர்கள் தமிழகத்தில் மதிக்கப்படுகிறார்கள். 
ஆனால் வடமாநிலங்களில் பணிபுரியும் தமிழர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றால் காரணம் என்ன?
அதற்காக நீங்கள் பள்ளியிலேயே இந்தி கற்றுக் கொண்டு போகவேண்டும் என்பதில்லை வடமாநிலத்தவற்களுக்கு மரியாதையைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். 
அது எப்போது நடக்கும் நீங்கள் உங்களை தமிழர்களாக இந்தியாவில் எல்லா உரிமையும் பெற்ற தமிழர்களாக உணரும்போதும், 
உரிமை மறுக்கப்படும்போது சகித்துக்கொண்டு வாழாமல் எதிர்த்து குரல் கொடுக்கும்போதும்தான் நாம் மதிக்கப்படுவோம். நம்மை நாமே மரியாதை கொடுத்துக்கொள்ளவில்லை என்றால் பிறர் எப்படி நம்மிடம் மரியாதையோடு நடந்து கொள்வார்கள். வடஇந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வு முறைக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். அதுதான் உண்மையான உரிமை மீட்புப் போராட்டம். நாமும் அவர்களிடமிருந்து போராட்ட உணர்வைப் பெற வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டம்தான் தமிழனை தலைநிமிர வைத்த போராட்டம். 
தமிழர்களின் உரிமைமீட்புக்கான போராட்டப் பண்பாட்டை மீட்டெடுப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா