சந்தேகமா இருக்கு தருண் விஜய் அவர்களே !
சந்தேகமா இருக்கு தருண் விஜய் அவர்களே !
·
மகாத்மா
காந்தி தமிழ் மொழியைக் கற்று தமிழின் சிகரமாக உள்ள திருக்குறளைப் படித்து, அதன் கொல்லாமைக்
கொள்கையைக் கடைபித்து வாழ்ந்தார். தென்அமேரிக்க மக்களுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்தார்.
- · வெளிநாட்டவரான ஜீ.யூ.போப் திருக்குறளைக் கற்றுத் தேர்ந்து, அதனால் தன்னை தமிழ் மாணவன் என்றே பெருமையாகக் கூறி கொண்டார்
- · திருக்குறளைப் படித்தபின் தன்னை தமிழனாக்கிக் கொள்ள தன்னுடைய பெயரையே மாற்றிக் கொண்டார் வீரமாமுனிவர்.
- · வரலாற்றை ஆய்ந்து அறிந்து தமிழர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று முழங்கினார் மராத்தியரான அறிவர் அம்பேத்கர்.
- · இந்தியா முழுமையும் தமிழர்களின் சொந்த நிலம் எனக் கூறினார் வங்கத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த தோழர் ஜோதிபாசு.
இவர்களின் தமிழப் பற்றில் தமிழர்களுக்குச்
சந்தேகம் எழுந்ததில்லை. இவர்கள் தமிழைப் போற்றியது தமிழக மக்களிடமிருந்து எதையும்
எதிர்பார்தல்ல என்பது வெளிப்படையாகவேத் தேரிகிறது. மாறாக தமிழின் தத்துவங்களைக் கற்றுத்
தங்களை உயர்த்திக் கொண்டார்கள்.
ஆனால்,
திருக்குறள் கருத்துக்களையோ, திருக்குறள் நெறி அரசியலையோ வலியுறுத்தாமல், திருக்குறள் கொள்கைகளுக்கு எதிரான பா.ச.க. அரசின் திட்டங்களை எதிர்க்காமல் வெறும் வார்த்தைகளால் மாத்திரம் திருக்குறளை பரப்புரை செய்யும் தருண்விஜயின் திருக்குறள் காதல் நம்மை சந்தேகிக்க வைக்கிறது.
திருக்குறள் கருத்துக்களையோ, திருக்குறள் நெறி அரசியலையோ வலியுறுத்தாமல், திருக்குறள் கொள்கைகளுக்கு எதிரான பா.ச.க. அரசின் திட்டங்களை எதிர்க்காமல் வெறும் வார்த்தைகளால் மாத்திரம் திருக்குறளை பரப்புரை செய்யும் தருண்விஜயின் திருக்குறள் காதல் நம்மை சந்தேகிக்க வைக்கிறது.
பாரதீய சனதா கட்சியின் உறுப்பினராகவும்,
மாநிலங்களவையின் உறுப்பினராகவும் உள்ள இவர் திருக்குறளைப் போற்றும் அதே நேரம் தமிழை
இந்தியாவின் ஆட்சி மொழியாக்க செய்ய வேண்டிய நடைமுறைகளைச் சட்ட பூர்வமாக எடுத்துச்
செல்லாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே நமக்கு எழுகிறது.
திருக்குறளில்
அமைச்சு என்கின்ற அதிகாரத்தில்
“
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் (637) “
ஒரு
செயலைச் செய்ய முயற்சி மேற்கொள்ளும் போது அச்செயலால் உலக இயல்புக்கு ஊறு நேராமல்
இருக்குமா என் ஆய்ந்து உலகத்து இயற்கையை பாதிக்காத செயல்களையேச் செய்யவேண்டும். என்ற
பொருளைத் தருகிறது இந்தக் குறள்.
ஆனால் குறள் நெறிக்கு மாறாக இயற்கையைப்
பாதிக்கும் வகையிலான கூடங்குளம் அணுமின் திட்டம், தஞ்சை மண்டலத்தில் மீத்தேன் எடுப்புத்
திட்டம் போன்ற திட்டங்களை பாரதீய சனதா கட்சியோடு சேர்ந்து தருண் விஜயும் ஆதிரிக்கிரே
ஏன்?
தனால்தா
ஒரு சாதாரண தமிழர்களுக்கு கீழ்கண்ட கேள்விகள் எழுந்துள்ளது… கேள்விகளுக்கு தருண் விஜயும்,
அவரைக் கொண்டாடும் தமிழர்களும் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.
மைய அரசு நிறுவனங்களில், சமூக வலைத்தளங்களில் இந்தியைப் பயன்படுத்த
வேண்டும்; சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும்; இனி ஆசிரியர்
தினம் என்பது குரு உத்சவ்; பல்கலைக்கழக உணவு விடுதிகளில் உணவு அட்டவணை இந்தியில் மட்டுமே
இருக்க வேண்டும்; உலக மொழிகளின் தாய் சமற்கிருதம் என்பதால் கேந்திரிய வித்யாலயாவில்
ஜெர்மனுக்குப் பதிலாக சமற்கிருதம் படிக்க வேண்டும்; நாடெங்கிலும் இந்தி மையங்கள் அமைத்து
இந்தி கற்பிக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் ஒன்றே ஒன்றையாவது தருண் விசய் எதிர்க்கின்றார?
மோதி அரசு இந்தியைப் பரப்புகிறது, தருண் விசய் தமிழைப் புகழ்கிறார்
என்றால் என்ன பொருள்?
தமிழ்
இரண்டாவது தேசிய மொழி என்றால் இந்தி எப்போது முதல் தேசிய மொழி ஆயிற்று? இந்திய அரசமைப்பில்
தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது என்பதைப் பேசத் தயங்குவது ஏன்? இது ஒருபுறமிருக்க இரண்டாவது
என இந்திக்கு அடுத்த நிலையைத் தமிழுக்குத் தருவது எப்படி மொழிச் சமத்துவம் ஆகும்? இந்தி,
தமிழை மட்டும் தேசிய மொழிகள் என ஏற்கச் சொல்வது மற்ற மக்கள் மொழிகளின் மீது இவ்விரு
மொழிகளையும் திணிப்பதாகாதா?
தருண்
விசய் தாம் சொல்லும் தமிழ் சார்ந்த கருத்துகளுக்கான சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடங்க
இதுவரை கோராமல் இருக்கக் காரணம் என்ன? இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி எனச் சொல்லும்
அரசமைப்பின் 17ஆம் உறுப்பு குறித்து அவர் கருத்தென்ன? அதில் அவர் சொல்வதற்கேற்ற திருத்தங்களை
மாநிலங்களவையில் முன்மொழியத் தயாரா? இந்தி மேம்பாட்டுக்காக மட்டும் அரசு அறிவித்துள்ள
திட்டங்கள் குறித்து ஏன் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை? இந்திய அரசின் இந்தி, சமற்கிருத
ஊக்குவிப்பு அறிவிப்புகளை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா? ஆதரிக்கிறார் என்றால் தமிழ்
மொழிக்காக இதுபோன்ற எதையும் அரசு அறிவிக்காதது குறித்து ஏன் இன்னும் கேள்வி எழுப்பவில்லை?
இந்தக் கேள்விகளுக்கு மௌனம்தான் விடை என்றால் இந்தப் பேர்வழி தமிழ் குறித்துப் பேசுவதில்
என்ன பொருள் இருக்கிறது? ஒரு மொழிக்கு உறுதியான செயலும் ஒரு மொழிக்கு வெறும் வாய்ச்
சொல்லும்தான் கருத்தும் என்றால் அது ஏமாற்று இல்லையா? அரசு ஊழியர்கள் இந்தி படிக்க
ஊக்கத் தொகை தருகிறது மோடி அரசு. அதேபோல் வடநாட்டில் தமிழ் படிக்கும் அரசு ஊழியர்களுக்கு
ஊக்கத் தொகை தர வேண்டும் என்று கேட்பாரா தருண்? காசிபனாரஸ் இந்துப் பல்கலைக் கழகங்களில்
1945ஆம் ஆண்டு தமிழ்த் துறை தொடங்கப்பட்டு இரண்டு தமிழ்ப் பேராசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், இன்று அந்த இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அங்கு மட்டுமா… ஆக்ரா, மீரத், கான்பூர்,
அலகாபாத், பாட்டியாலா, சண்டிகர், கௌகாத்தி, இலக்னோ, அலிகார், கொல்கத்தா ஆகிய ஊர்களில்
உள்ள பல்கலைகழகங்களிலும் தமிழ்ப் பேராசிரியர்கள் இல்லை. காசி சம்பூர்ணானந்தா சமற்கிருதப்
பல்கலைக்கழகம், காசி வித்யா பீடம் ஆகிய இடங்களிலும் தமிழ்த் துறைக்கான பேராசிரியர்கள்
நியமிக்கப்படவே இல்லை. இவை குறித்து தருண் விசயின் சொல்லும் செயலும் என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக